அரசையும், அ.தி.மு.க.வையும் பாதுகாக்க எடப்பாடி பழனிசாமி, தினகரன் இணைந்து செயல்பட வேண்டும்
அரசையும், அ.தி.மு.க.வையும் பாதுகாக்க எடப்பாடி பழனிசாமி, டி.டி.வி. தினகரன் இணைந்து செயல்பட வேண்டும் என்று தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. கூறினார்.
நெல்லை,
மனித நேய ஜனநாயக கட்சி கடந்த 2 ஆண்டுகளாக பிரமாண்ட வளர்ச்சி அடைந்துள்ளது. சமூக முன்னேற்றம், தமிழகத்தின் வளர்ச்சி உள்ளிட்ட கொள்கைகளை அடிப்படையாக கொண்டு செயல்பட்டு வருகிறோம்.
டெல்லி மற்றும் புதுச்சேரியில் முதல்-மந்திரிகளை ஆட்சி செய்ய விடாமல், கவர்னர்கள் மூலம் இரட்டை தலைமையை உருவாக்கி நிர்வாகத்தை பா.ஜனதா அரசு சீர்குலைத்துள்ளது. இந்த நிலையை தமிழகத்திலும் ஏற்படுத்த மத்திய அரசு முயற்சிக்கிறது. கோவையில் அதிகாரிகளை அழைத்து கவர்னர் ஆய்வு கூட்டம் நடத்தியது கண்டிக்கத்தக்கது. தமிழக கவர்னர் தனது வரையறைக்குள் நின்று செயல்பட வேண்டும். மாநில உரிமைகளை பறிக்கும் வேலையில் கவர்னர் ஈடுபடக்கூடாது. கவர்னரின் இந்த நிலை தொடர்ந்தால் மாநில சுயாட்சி கோரிக்கை தீவிரம் ஆக்கப்படும்.
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வீட்டில் சோதனை நடத்தி இருப்பது ஜெயலலிதா புகழை கெடுக்கும் நடவடிக்கை ஆகும். அ.தி.மு.க.வை அழித்துவிட்டு தமிழகத்தில் பா.ஜனதா தனது அதிகாரத்தை நிலைநாட்ட கனவு காண்கிறது. குஜராத், அருணாச்சலபிரதேசம் போன்ற மாநிலங்களில் நடந்ததை போன்று தமிழகத்தில் செயல்பட முடியாது.
தமிழ்நாடு, தந்தை பெரியாரின் திராவிட பூமி. வட இந்திய கலாசாரத்தை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். தமிழகத்தை அ.தி.மு.க., தி.மு.க. போன்ற திராவிட கட்சிகளே ஆள வேண்டும். மதவாத கட்சிகளை தடுக்கும் ஆற்றல் இந்த கட்சிகளுக்குத்தான் உள்ளது. தமிழகத்தில் மதவாதம் வளர ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.
டி.டி.வி. தினகரனின் வளர்ச்சியை பா.ஜனதாவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதனால்தான் வருமான வரி சோதனை நடத்துகின்றனர். அ.தி.மு.க.வையும், அரசையும் பாதுகாக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, டி.டி.வி. தினகரன் ஆகியோர் ஒன்றுபட வேண்டும். அவர்கள் ஒன்றுசேரவில்லை என்றால் அ.தி.மு.க.வுக்கும், தமிழகத்துக்கும் இழப்பு ஏற்படும்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி சமூக நீதிக்காக பாடுபட்டவர். அவரை மரியாதை நிமித்தமாக சந்தித்து நலம் விசாரித்தோம். இதேபோல் நடராஜன், குமரி அனந்தன் உள்ளிட்டோரையும் சந்தித்து நலம் விசாரிக்க உள்ளோம். தி.மு.க. உடன் அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை. மனித நேய ஜனநாயக கட்சி தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவு எடுத்து அறிவிக்கும்.
சில அமைச்சர்களின் பேச்சுக்கள் 23-ம் புலிகேசி சினிமா படம் போல் உள்ளது. அவர்கள் வாயை மூடிவிட்டு, துறை ரீதியான பணிகளில் வேகமாக செயல்பட்டால் நன்றாக இருக்கும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்றோர் மாநில உரிமைகளை விட்டுக் கொடுத்ததில்லை. அந்த இடத்தில் இருந்து கொண்டு மாநில உரிமையை எடப்பாடி பழனிசாமி விட்டுக் கொடுத்தால் அவரை தமிழகம் மன்னிக்காது.
இவ்வாறு தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. கூறினார்.

Related Tags :
Next Story