ரூ.2 கோடி மதிப்புள்ள தங்கக்கட்டிகள் பறிமுதல் ஒருவர் கைது; 3 பேர் தப்பி ஓட்டம்
இலங்கையில் இருந்து மண்டபத்திற்கு மீன் பிடி படகில் கடத்தி வரப்பட்ட ரூ.2 கோடி மதிப்புள்ள தங்க கட்டிகளுடன் ஒருவர் பிடிபட்டார். 3 பேர் தப்பி ஓடிவிட்டனர்.
பனைக்குளம்,
இலங்கையில் இருந்து மண்டபம் பகுதிக்கு தங்க கட்டிகள் கடத்தி வருவதாக கியூபிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கியூ பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கென்னடி, சப்-இன்ஸ்பெக்டர்கள் சந்தனமாரி, செல்வகுமார் உள்ளிட்ட கியூ பிரிவு போலீசார் மண்டபம் வடக்கு கடற்கரை பகுதியில் மறைந்து இருந்து கண்காணித்து வந்தனர். அப்போது ஒரு நாட்டுப்படகை விட்டு இறங்கிய 2 பேர், கடற்கரையில் மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்த 2 பேருடன் செல்ல முயன்றனர்.
அப்போது அவர்கள் 4 பேரையும் கியூபிரிவு போலீசார் பிடிக்க முயன்றனர். இதையடுத்து 4 பேரும் தப்பினர். இதில் கீழக்கரை கிழக்கு தெருவை சோந்த நசீர் கமால்பாட்சா (வயது 37) என்பவர் மட்டும் பிடிபட்டார். மற்ற 3 பேர் தப்பி ஓடிவிட்டனர் அவரிடம் சோதனை செய்தபோது இடுப்பில் கட்டப்பட்டு இருந்த துணி பெல்ட்டில் ஏராளமான தங்க கட்டிகள் இருப்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து மொத்தம் 69 தங்க கட்டிகளை கியூபிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.
பின்னர் தங்க கட்டிகளுடன் அவரை, மண்டபம் முகாமில் உள்ள கியூ பிரிவு போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்து வந்தனர்.
தீவிர விசாரணைக்குப்பின் அவர் கைது செய்யப்பட்டார்.
பறிமுதல் செய்யப்பட்ட தங்கக் கட்டிகளை எடை போட்டு பார்த்ததில் மொத்தம் 6 கிலோ 856 கிராம் இருந்தது. மேலும் அவரிடமிருந்து ஜி.பி.எஸ்.கருவி, ஆதார் கார்டு உள்ளிட்டவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
தங்க கட்டிகளை கடத்தி வந்த நசீர் விசாரணையில் கூறியதாவது:-
மண்டபம் வடக்கு கடற்கரையில் இருந்து கடந்த 19-ந் தேதி அன்று மாலை அபுதாகிர் என்பவருடன் ஒரு நாட்டுப் படகில் வலைகளுடன் மீன் பிடிப்பது போல் சென்றோம். அப்போது கச்சத்தீவு அருகே உள்ள நடுக்கடலில் படகில் காத்திருந்த போது நள்ளிரவில் இலங்கையில் இருந்து ஒரு பிளாஸ்டிக் படகில் வந்த 2 பேர் எங்களிடம் 69 தங்கக் கட்டிகளை கொடுத்து விட்டு சென்றனர். அந்த தங்க கட்டிகளை கொண்டு வந்து மண்டபம் கடற்கரையில் நின்று கொண்டிருந்த கீழக்கரையை சேர்ந்த அமீர், அன்வர் ஆகிய 2 பேரிடமும் ஒப்படைக்க இருந்தோம். அப்போது நான் பிடிபட்டு விட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுபற்றி கியூ பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கூறியதாவது:-
மண்டபம் காந்திநகர் பகுதியை சேர்ந்த முனீசுவரன் என்பவரிடம் இருந்து கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஒரு மீன் பிடி நாட்டுப்படகை நசீர், அபுதாகிர் விலைக்கு வாங்கி உள்ளனர். படகை விலைக்கு வாங்கியவர்கள் படகின் பெயரை மாற்றாமல் அதே பெயரிலேயே வைத்து மீன் பிடிக்கச் செல்வது போல் தங்க கட்டிகளை கடத்திவர பயன்படுத்தியுள்ளனர். 5 முறைக்கு மேல் சுமார் 25 கிலோவுக்கு மேல் தங்கக் கட்டிகளை கடத்தி வந்துள்ளதாக அவர்கள் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
தப்பி ஓடிய கீழக்கரையை சேர்ந்த அன்வர், அமீர், அபுதாகீர் ஆகிய 3 பேரையும் தீவிரமாக தேடி வருகிறோம். தப்பி ஓடிய நபர்கள் யாரிடமும் தங்கக் கட்டிகள் இல்லை. பிடிபட்ட தங்கக் கட்டிகளின் மதிப்பு ரூ. 2 கோடி இருக்கும். அவற்றை, மண்டபத்தில் உள்ள சுங்கத்துறையினரிடம் ஒப்படைக்க உள்ளோம்

Related Tags :
Next Story