ஊட்டியில் 7 வீடுகள் இடித்து தரைமட்டம் அதிகாரிகள் நடவடிக்கை
ஊட்டியில் வருவாய்த்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்ட 7 வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.
ஊட்டி,
ஊட்டி பிங்கர்போஸ்ட் பகுதியில் கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டிடம் உள்ளது. இந்த அலுவலகம் கட்டுவதற்கு முன்பு பெரியம்மை, மலேரியா, நிமோனியா போன்ற தொற்றுநோய்கள் ஏற்பட்டால், பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்க அப்பகுதியில் பாதுகாப்பான மருத்துவ அறைகள், குடியிருப்புகள் கட்டப்பட்டு இருந்தன. பின்னர் நாளடைவில் ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் மேற்கண்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டுகள் தொடங்கப்பட்டது.
ஆனால், அப்பகுதியில் பணிபுரிந்த அதிகாரிகள் தாங்கள் குடியிருந்த வீடுகளை வேறு நபர்களுக்கு கொடுத்து விட்டனர். இது பலரது கை மாறி 2, 3 பேர் குடியிருந்து வந்தனர். அந்த இடம் வருவாய்த்துறைக்கு சொந்தமானது என்பதால், சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு அப்பகுதியில் இருந்த 8 வீடுகளை வருவாய்த்துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் இடித்து தள்ளினர்.
தற்போது அப்பகுதியில் கருமாரியம்மன் கோவில், பிரத்தியங்கரா கோவில் மற்றும் அதன் அருகில் ஒரு வீடும், சில அடி தூரத்தில் 6 வீடுகளும் இருந்தன. இந்த வீடுகளில் குடியிருந்தவர்களை காலி செய்யும் படி வருவாய்த்துறையினர் நோட்டீசு ஏற்கனவே கொடுத்து உள்ளனர். மேலும் அங்கிருந்தவர்களுக்கு பிங்கர்போஸ்ட் பகுதியில் ஒரு நபருக்கு தலா ½ சென்ட் நிலம் வழங்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் வருவாய்த்துறைக்கு சொந்தமான அந்த இடத்தில் கட்டப்பட்ட வீடுகளை இடித்து அகற்றும் பணி நேற்று நடைபெற்றது.
ஊட்டி தாசில்தார் மகேந்திரன் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீஸ் பாதுகாப்புடன் பணி மேற்கொள்ளப்பட்டது. பொக்லைன் எந்திரம் மூலம் 6 வீடுகள் இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டது. கோவில் அருகே உள்ள ஒரு வீட்டை இடிக்கும் போது, இந்து அமைப்பினர் கோவிலுக்கு சொந்தமான வீட்டை இடிக்கக்கூடாது என தாசில்தாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சென்னை ஐகோர்ட்டு உத்தரவுபடி வீடுகள் இடிப்பு பணி நடைபெறுகிறது என்று வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து 3 மணி நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் அந்த வீடும் இடித்து அகற்றப்பட்டது.

Related Tags :
Next Story