தென்காசியில் பாரதீய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தென்காசி,
தென்காசி நகரில் பல பகுதிகளில் குண்டும், குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும். வீட்டு வசதி வாரிய குடியிருப்பின் கீழ் பகுதியில் தெரு விளக்குகள் அமைக்க வேண்டும். 4 மற்றும் 5–வது வார்டு பகுதி மக்கள் பயன்படுத்தி வந்த, மேம்பாலத்திற்காக இடிக்கப்பட்ட கழிவறையை மீண்டும் அமைக்க வேண்டும் மற்றும் சீரான குடிநீர், வாறுகால் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசி நகர பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் நகரசபை அலுவலகம் முன்பு நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நகர தலைவர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். துணை தலைவர் வாசுகி கணேஷ், பொருளாளர் நாராயண மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொது செயலாளர் குத்தாலிங்கம் வரவேற்றார். தேசிய பொதுக்குழு உறுப்பினர் அன்புராஜ், நெல்லை மேற்கு மாவட்ட தலைவர் குமரேச சீனிவாசன், மாவட்ட பொது செயலாளர்கள் பாலகுருநாதன், ராமராஜா, வக்கீல் முருகேசன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில் பிரசார பிரிவு தலைவர் விவேக் பாண்டியன், தொழில்நுட்ப பிரிவு கார்த்திக், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கருப்பசாமி, ராஜ்குமார், ராஜா சிங், முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். நகர செயலாளர் சங்கர சுப்பிரமணியன் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story