மன்னார்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மன்னார்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மன்னார்குடி,
மன்னார்குடி நகராட்சி அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாவட்டக்குழு உறுப்பினர் தங்கராசு, நகரக்குழு உறுப்பினர்கள் சந்திரா, ரெகுபதி, அகோரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நகரக்குழு உறுப்பினர்கள் சிராஜூதீன், தெட்சிணாமூர்த்தி, தாயுமானவன், கலைச்செல்வி, ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், 30-வது வார்டு அந்தோணியார் கோவில் தெருவில் பொதுசுகாதார வளாகத்தை திறக்க வேண்டும். 18-வது வார்டு மஸ்தான் பள்ளிதெருவில் கழிவுநீர் தேங்கி கொசு உற்பத்தியாகும் செங்குளத்தை சுத்தம் செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.
29-வது வார்டு கோபிரளயம் ரோடு ஆறாம் நம்பர் வாய்க்கால் பகுதியில் உள்ள மக்களுக்கு குடிநீர் வசதி செய்துதர வேண்டும். சேறும், சகதியுமாக உள்ள தேரடி பொதுக்கூட்ட மைதானத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, முறையாக பராமரித்திட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Related Tags :
Next Story