கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி ஆவின் பால் பண்ணை எதிரில், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார்.
மாவட்ட குழு உறுப்பினர் பெரியசாமி, துணை செயலாளர் சின்னசாமி, துணைத்தலைவர்கள் சங்கர், கண்ணுபையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, பால் கொள்முதல் விலை, பசும்பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.40, எருமைப்பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.50 என உயர்த்தி வழங்க வேண்டும். கால்நடை தீவன மானியம் 50 சதவீதம் உடனடியாக வழங்க வேண்டும். கிருஷ்ணகிரி பால் பண்ணையில் தீவன தொழிற்சாலை நிறுவ வேண்டும். பால் உற்பத்தியாளர்களுக்கு பால் கொள்முதல் மானியமாக லிட்டர் ஒன்றுக்கு ரூ.3 ம், கிராம சங்க நிர்வாக செலவிற்காக லிட்டர் ஒன்றுக்கு ரூ.3 ம் அரசு மானியம் வழங்க வேண்டும்.
மதுரை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, பாலின் தரத்தை பால் கொள்முதல் செய்யும் இடத்திலேயே மதிப்பிட்டு, ஒப்புதல் சீட்டு வழங்க வேண்டும் என்பதை உடனடியாக அமல்படுத்திட வேண்டும். ஆரம்ப சங்க பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து, ஆவின் ஊழியர்களுக்கு இணையாக சம்பளம், போனஸ், ஓய்வூதியம் உள்ளிட்ட அனைத்து சலுகைகளையும் உடனடியாக அமல்படுத்த வேண்டும். கிராம சங்கங்களுக்கு ஒன்றியம் வழங்க வேண்டிய பால் பண பட்டுவாடா நிலுவை, சங்கங்களுக்கு வழங்க வேண்டிய நிர்வாக செலவினங்கள் முதலியவற்றை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி கோஷங் கள் எழுப்பப்பட்டன.
இதில் தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட தலைவர் கோதண்டராமன், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் மதன், தமிழ்நாடு விவசாய சங்க வட்ட செயலாளர் ஜெயசங்கர், சி.ஐ.டி.யூ. மாவட்ட குழு துணை செயலாளர் குமுதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் நஞ்சுண்டன், ஒன்றிய செயலாளர் ராஜா, மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில், ரங்கநாதன் நன்றி கூறினார்.
இதேபோல் ஊத்தங்கரை தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் எம்.அண்ணாமலை தலைமை தாங்கினார். மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஏ.ராஜா, எம்.கே.பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சி.பிரகாஷ் வாழ்த்தி பேசினார்.
பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் முத்துக்குமார், சபாபதி, சிவலிங்கம், பாஞ்சாலராசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story