தி.மு.க. சார்பில் ரே‌ஷன் கடை முன்பு ஆர்ப்பாட்டம்


தி.மு.க. சார்பில் ரே‌ஷன் கடை முன்பு ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 Nov 2017 3:45 AM IST (Updated: 22 Nov 2017 8:13 PM IST)
t-max-icont-min-icon

குடியாத்தம் நகர தி.மு.க. சார்பில் ரே‌ஷன் கடை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குடியாத்தம்,

ரே‌ஷன் கடைகளில் சர்க்கரை விலை உயர்வை கண்டித்து குடியாத்தம் நகர தி.மு.க. சார்பில் காமாட்சியம்மன் பேட்டை பிள்ளையார் கோவில் தெருவில் ரே‌ஷன் கடை முன்பு நகர பொறுப்பாளர் சவுந்தர்ராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் எம்.எல்.ஏ. வி.ஜி.தனபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நெல்லூர்பேட்டை பேரணாம்பட்டு ரோடு ரே‌ஷன் கடை முன்பு பொதுக்குழு உறுப்பினர் பிரேமா கோபாலகிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் ஜி.எஸ்.அரசு, நிர்வாகிகள் சிவசங்கர், கருணாநிதி, நடராஜன், மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் குடியாத்தம் நகரில் உள்ள ரே‌ஷன் கடைகள் முன்பு தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story