கோவில்பட்டி, திருச்செந்தூர் பகுதியில் ரே‌ஷன் கடைகள் முன்பு தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


கோவில்பட்டி, திருச்செந்தூர் பகுதியில் ரே‌ஷன் கடைகள் முன்பு தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 Nov 2017 11:00 PM GMT (Updated: 2017-11-22T23:18:41+05:30)

கோவில்பட்டி, திருச்செந்தூர் பகுதியிலுள்ள ரே‌ஷன் கடைகள் முன்பு சர்க்கரை விலை உயர்வைக் கண்டித்து நேற்று தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆறுமுகநேரியில் அனிதா ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ. தலைமையில் போராட்டம் நடந்தது.

கோவில்பட்டி,

சர்க்கரை விலை உயர்வை கண்டித்தும், அரிசி, பாமாயில், துவரம் பருப்பு, கோதுமை உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் சீராக வழங்க வலியுறுத்தியும், நேற்று காலையில் கோவில்பட்டி, திருச்செந்தூர் பகுதிகளில் உள்ள ரே‌ஷன் கடைகள் முன்பு தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆறுமுகநேரி ஏ.ஐ.டி.யு.சி. காலனியில் உள்ள ரே‌ஷன்கடை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். முன்னாள் நகர பஞ்சாயத்து தலைவர் கல்யாணசுந்தரம், ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கோவில்பட்டி பாரதி நகர் மேட்டு தெரு ரே‌ஷன் கடை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. நகர செயலாளர் கருணாநிதி தலைமை தாங்கினார். மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ராமர், மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் இந்துமதி உள்பட பலர் கலந்து கொண்டனர். கூசாலிபட்டியில் மேற்கு ஒன்றிய செயலாளர் முருகேசன் தலைமையிலும், கோவில்பட்டி தெப்பக்குளத் தெருவில் தலைமை செயற்குழு உறுப்பினர் மாறன் தலைமையிலும், கோவில்பட்டி இளையரசனேந்தல் ரோடு நடராஜபுரத்தில் பொதுக்குழு உறுப்பினர் பாண்டியன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. கோவில்பட்டி புதுகிராமம் மெயின் ரோட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணை செயலாளர் ஏஞ்சலா தலைமை தாங்கினார். மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கயத்தாறு மெயின் ரோட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் சுடலை தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் சின்ன பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அய்யனாரூத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் அய்யாத்துரை பாண்டியன், கிளை செயலாளர் ரஹமத்துல்லா, பஞ்சாயத்து செயலாளர் கருப்பசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கழுகுமலையில் மாநில விவசாய தொழிலாளர் அணி செயலாளர் சுப்பிரமணியன் தலைமையிலும்,  விளாத்திகுளம் காமராஜ் நகரில் மாவட்ட அவை தலைவர் பெருமாள் தலைமையிலும், கரிசல்குளத்தில் மேற்கு ஒன்றிய செயலாளர் வேலாயுதபெருமாள் தலைமையிலும்,  காடல்குடியில் கிழக்கு ஒன்றிய செயலாளர் ரவீந்திரன் தலைமையிலும், புதூர் காந்தி பஜாரில் நகர செயலாளர் தவசி தலைமையிலும் தி.மு.க.வினர் ரே‌ஷன் கடைகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். குளத்தூர், நாகலாபுரம் ரே‌ஷன் கடைகளின் முன்பும் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

எட்டயபுரத்தில் நகர செயலாளர் பாரதி கணேசன் தலைமையிலும், தென்திருப்பேரை பஜார் வீதியில் நகர செயலாளர் ராமஜெயம் தலைமையிலும், ஆழ்வார்திருநகரியில் நகர செயலாளர் முத்துராமலிங்கம் தலைமையிலும், குரும்பூரில் ஒன்றிய செயலாளர் நவீன்குமார் தலைமையிலும், திருச்செந்தூர் நாடார் தெருவில் நகர செயலாளர் மந்திரமூர்த்தி தலைமையிலும் ரே‌ஷன் கடைகள் முன்பு தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உடன்குடி கூளத் தெருவில் உள்ள ரே‌ஷன் கடை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் ஜான் பாஸ்கர் தலைமை தாங்கினார். மாவட்ட பிரதிநிதி சிவராமலிங்கம்  உள்பட பலர் கலந்து கொண்டனர். ஸ்ரீவைகுண்டத்தில் ரே‌ஷன்கடை முன்பு மேற்கு ஒன்றிய செயலாளர் வைகுண்டபாண்டியன் தலைமையிலும், மேலசாத்தான்குளத்தில் ஒன்றிய செயலாளர் ஜோசப் தலைமையிலும், தச்சமொழியில் நகர செயலாளர் இளங்கோ தலைமையிலும், தட்டார்மடத்தில் ஒன்றிய அவை தலைவர் சவுந்திரபாண்டியன் தலைமையிலும், படுக்கப்பத்தில் மாவட்ட பிரதிநிதி இந்திரகாசி தலைமையிலும் ரே‌ஷன் கடைகள் முன்பு தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


Next Story