திருச்சி ரெயில்வே அலுவலக பூட்டை உடைத்து பொருட்கள் திருட்டு


திருச்சி ரெயில்வே அலுவலக பூட்டை உடைத்து பொருட்கள் திருட்டு
x
தினத்தந்தி 23 Nov 2017 3:45 AM IST (Updated: 23 Nov 2017 1:05 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி ரெயில்வே அலுவலக பூட்டை உடைத்து பொருட்கள் திருட்டு

திருச்சி,

திருச்சி பாலக்கரை ரெயில் நிலையத்தில், பயணிகள் ரெயில்களுக்கு மட்டும் காலை, மாலை வேளைகளில் தனியார் ஒப்பந்ததாரர் மூலம் டிக்கெட் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இரவு நேரங்களில் இந்த அலுவலகம் பூட்டி இருக்கும். நேற்று முன்தினம் மாலை டிக்கெட் கொடுத்து முடிந்தவுடன் இரவு ஊழியர்கள் அலுவலக கதவை பூட்டிவிட்டு சென்றனர். நேற்று காலை துப்புரவு பணியாளர்கள் அங்கு வந்த போது அலுவலக கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே இது குறித்து ஊழியர்களுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் ரெயில்வே போலீசாருக்கு இது பற்றி தெரிவித்தனர். உடனே ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர், சப்-இன்ஸ்பெக்டர் லெட்சுமி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அலுவலகத்தில் இருந்த கம்ப்யூட்டர் மற்றும் சில பொருட்கள் திருட்டு போய் இருந்தது தெரியவந்தது. சம்பவ இடத்துக்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. இந்த திருட்டு சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story