பா.ஜனதா ஆட்சியில் நடந்த மின்சார கொள்முதல் முறைகேடு குறித்து விசாரணை சித்தராமையா அறிவிப்பு
பா.ஜனதா ஆட்சியில் நடந்த மின்சார கொள்முதல் முறைகேடு குறித்து விசாரணை நடத்தப்படும் என்று சித்தராமையா அறிவித்தார்.
பெலகாவி,
பா.ஜனதா ஆட்சியில் நடந்த மின்சார கொள்முதல் முறைகேடு குறித்து விசாரணை நடத்தப்படும் என்று சித்தராமையா அறிவித்தார்.
முதல்–மந்திரி சித்தராமையா சிக்கோடியில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–
மக்களை திசை திருப்ப...மகதாயி நதிநீர் பிரச்சினையை ஒரு மாதத்தில் தீர்த்து வைப்பதாக எடியூரப்பா கூறியுள்ளார். பா.ஜனதா தலைவர்கள் வடகர்நாடக பகுதியில் மாற்றத்திற்கான பயணத்தை நடத்துகிறார்கள். மக்களை திசை திருப்ப எடியூரப்பா இவ்வாறு கூறி இருக்கிறார். இந்த பிரச்சினையை அக்கட்சியின் தலைவர்கள் கண்டுகொள்ளவே இல்லை.
ஆனால் இப்போது திடீரென்று மகதாயி நதிநீர் பிரச்சினையை தீர்ப்பதாக சொல்கிறார்கள். ஒரு மாதத்தில் இந்த பிரச்சினைக்கு தீர்வு கண்டால் எங்களுக்கு மகிழ்ச்சி தான். இதனால் மக்களுக்கு குடிநீர் வசதி கிடைக்கும். மகதாயி நதிநீர் பிரச்சினைக்காக அனைத்துக்கட்சி குழுவை டெல்லிக்கு அழைத்துச் சென்று பிரதமரை சந்தித்தேன். அப்போது இவர்கள் வாய் திறக்கவே இல்லை.
நடுவர் மன்றம் ஆலோசனைஎடியூரப்பா, சதானந்தகவுடா, ஜெகதீஷ் ஷெட்டர் உள்ளிட்டோர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. பிரதமருக்கு அழுத்தம் கொடுக்கவில்லை. மகதாயி நதி மூலம் நீர் வீணாக கடலில் கலக்கிறது. அதில் 7.56 டி.எம்.சி.(ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) தாருங்கள் என்று தான் நாங்கள் கேட்கிறோம்.
இந்த விவகாரம் நடுவர் மன்றத்தில் உள்ளது. பரஸ்பர பேச்சுவார்த்தை மூலம் இந்த பிரச்சினைக்கு தீர்வு கண்டுகொள்ளுமாறு நடுவர் மன்றம் ஆலோசனை கூறியது. இந்த பேச்சுவார்த்தைக்கு பிரதமர் தான் ஏற்பாடு செய்ய வேண்டும். பேச்சுவார்த்தைக்காக நான் கோவா முதல்–மந்திரிக்கு 2 முறை கடிதம் எழுதினேன். எந்த பதிலும் வரவில்லை. எடியூரப்பா ஒரு மாதம் காலஅவகாசம் கேட்டுள்ளார். என்ன நடக்கிறது என்று நாங்கள் அதுவரை காத்திருந்து பார்க்கிறோம்.
ஊழல் இல்லாத ஆட்சியை...கர்நாடக காங்கிரஸ் அரசில் ஊழல் அதிகரித்துவிட்டதாக எடியூரப்பா குற்றம்சாட்டியுள்ளார். ஊழல் செய்துவிட்டு சிறைக்கு சென்று வந்தவர்கள் யார்?. உணவு சாப்பிடவோ அல்லது உறவு முறையை வளர்த்துக்கொள்ளவோ அவர் சிறைக்கு சென்றாரா?. நாங்கள் ஊழல் இல்லாத ஆட்சி நிர்வாகத்தை நடத்தி வருகிறோம். ஊழல் எதுவும் நடைபெறவில்லை.
பா.ஜனதா ஆட்சியில் மின்சார கொள்முதலில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்படும். எந்த அமைப்பு மூலம் விசாரணை நடத்துவது என்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பா.ஜனதா சொல்கிறது. முன்பு சி.பி.ஐ. விசாரணை அமைப்பை பற்றி கடுமையாக குறை கூறியவர்கள் தான் இவர்கள். பிரதமர் மூலம் தப்பிக்கவே சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று சொல்கிறார்கள்.
பல்வேறு வழக்குகள்போலீஸ் அதிகாரி கணபதி தற்கொலையில் மந்திரி கே.ஜே.ஜார்ஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனால் அவர் ராஜினாமா செய்ய வேண்டிய அவசியம் இல்லை. எடியூரப்பா மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளன. இதனால் அவர் கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் அல்லவா?.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.