ஹாசன் அருகே ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிந்தது 20 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்


ஹாசன் அருகே ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிந்தது 20 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
x
தினத்தந்தி 23 Nov 2017 3:45 AM IST (Updated: 23 Nov 2017 3:03 AM IST)
t-max-icont-min-icon

ஹாசன் அருகே, ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிந்தது. 20 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

ஹாசன்,

ஹாசன் அருகே, ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிந்தது. 20 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிந்தது

உடுப்பி மாவட்டம் குந்தாப்புராவில் இருந்து நேற்று முன்தினம் இரவு ஆம்னி பஸ் பெங்களூரு நோக்கி புறப்பட்டு சென்றது. அந்த பஸ்சில் டிரைவர், கிளீனர், பயணிகள் என 22 பேர் பயணம் செய்தனர். அந்த பஸ் நேற்று அதிகாலை 4 மணிக்கு ஹாசன் அருகே கஞ்சட்டஹள்ளி பகுதியில் வந்தபோது, பஸ்சின் பின்பகுதியில் இருந்து திடீரென புகை கிளம்பியது.

இதனை கவனித்த பஸ் டிரைவர் உடனடியாக பஸ்சை நிறுத்தினார். மேலும் பயணிகள் அனைவரையும் அவர் பஸ்சில் இருந்து உடனடியாக கீழே இறங்க சொன்னார். பயணிகள் இறங்கிய சிறிது நேரத்தில் பஸ் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.

அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

இதுபற்றி தகவல் அறிந்த ஹாசன் புறநகர் போலீசாரும், தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தீயணைப்பு படைவீரர்களும் தீப்பிடித்து எரிந்த பஸ்சின் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

ஆனாலும் பஸ் முழுவதும் எரிந்து நாசமானது. போலீசார் நடத்திய விசாரணையில் ஏ.சி. எந்திரத்தில் ஏற்பட்ட மின்கசிவால் பஸ்சில் தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக ஹாசன் புறநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். டிரைவர் சமார்த்தியமாக செயல்பட்டதால் 20 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.


Next Story