இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி அணிக்கு ஒதுக்கீடு: அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்


இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி அணிக்கு ஒதுக்கீடு: அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
x
தினத்தந்தி 23 Nov 2017 10:45 PM GMT (Updated: 23 Nov 2017 8:28 PM GMT)

இரட்டை இலை சின்னம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணிக்கு ஒதுக்கப்பட்டதையொட்டி தஞ்சை மாவட்டத்தில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

கும்பகோணம்,

இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிசாமி அணிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்தது. இதை தொடர்ந்து கும்பகோணம் நகர அ.தி.மு.க. சார்பில் நகர செயலாளர் ராம.ராமநாதன் தலைமையில் கும்பகோணம் காந்தி பூங்கா அருகே பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். இதில் அ.தி.மு.க. நிர்வாகிகள் செல்வராஜ், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட திரளான அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர். மேலும், புதிய பஸ் நிலையத்திலும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

அதே போல கும்பகோணம் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் ஒன்றிய செயலாளர் சோழபுரம் அறிவழகன் தலைமையில் அ.தி.மு.க.வினர் பக்தபுரி தெரு ரவுண்டானா அருகே பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடினர். இதில் மாநில கைத்தறி பிரிவு செயலாளர் கே.ஜெ.லெனின், பால்வள கூட்டுறவு சங்க தலைவர் என்.ஆர்.வி.எஸ்.செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர். அதே போல நகர ஜெயலலிதா பேரவை சார்பில் நகர செயலாளர் அயூப்கான் தலைமையில் அ.தி.மு.க.வினர் கும்பகோணம் புதிய பஸ் நிலையத்தில் பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை கடைவீதியில் ஒன்றிய செயலாளர் ஏ.வி.கே. அசோக்குமார் தலைமையில் திரளான அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். இதில் ஒன்றிய துணை செயலாளர் வளர்மதி ராஜேந்திரன், முன்னாள் ஒன்றியக்குழு துணைத்தலைவர் வி.கே.பாலமுருகன், ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பங்க்சேகர், சோழன் பட்டு கூட்டுறவு சங்க இயக்குனர் சேகர், ஆடுதுறை நகர செயலாளர் டி.சி.ஜெ.செல்வம், ஏ.முத்துவேல் உள்பட திரளான அ.தி.மு.க.வினர் கலந்துகொண்டனர்.

திருப்பனந்தாள் கடை வீதியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் சுந்தரராஜன், யூனியன் வீரமணி, மூர்த்தி, வீரமார்த்தாண்டன் உள்பட ஒன்றிய, நகர நிர்வாகிகள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். உக்கரை, கஞ்சனூர், பந்தநல்லூர் உள்ளிட்ட இடங்களிலும் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

ஒரத்தநாட்டில் அ.தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் கோவி.தனபால், ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.ரவிச்சந்திரன், நகர செயலாளர் த.செல்வம், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர் பழனிவேல் வாண்டையார் உள்ளிட்ட அ.தி.மு.க.வினர் திரளானோர் அண்ணா, எம்.ஜி.ஆர் சிலைகளுக்கு மாலை அணிவித்து பட்டாசு வெடித்து கொண்டாடினர். அதேபோல் திருவோணம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் ஆர்.சத்தியமூர்த்தி தலைமையில் அ.தி.மு.க.வினர் ஊரணிபுரத்தில் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

பட்டுக்கோட்டை மணிக்கூண்டு அருகே அ.தி.மு.க.வினர் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.சேகர் தலைமையில் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். இதில் ஒன்றிய செயலாளர் பி.சுப்பிரமணியன், நகர செயலாளர் சுப.ராஜேந்திரன், துணைச் செயலாளர் பிரகாசம், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் மலை அய்யன், முன்னாள் எம்.எல்.ஏ.ராமச்சந்திரன், முன்னாள் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட ஜெய லலிதா பேரவை தலைவர் உதயகுமார், ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் முருகானந்தம், முன்னாள் நகர செயலாளர்கள் பாரதி, விவேகானந்தம், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஏனாதி சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story