நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி வருமான வரித்துறை அதிகாரி சாவு 2 பேர் படுகாயம்


நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி வருமான வரித்துறை அதிகாரி சாவு 2 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 23 Nov 2017 9:45 PM GMT (Updated: 2017-11-24T03:15:37+05:30)

புனேயில் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் வருமான வரித்துறை அதிகாரி உயிரிழந்தார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

புனே,

புனேயில் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் வருமான வரித்துறை அதிகாரி உயிரிழந்தார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

கார் மோதியது

புனே மாவட்டத்தில் உள்ள தெலிகாவ் பகுதியில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதன் பின்னர் வருமான வரித்துறை இன்ஸ்பெக்டர் அபிஷேக் தியாகி, வருமான வரித்துறை துணை கமி‌ஷனர் ஆனந்த் உபாத்யாய், அதிகாரி கே.கே.மிஸ்ரா ஆகியோர் ஒரு காரில் புனே திரும்பி கொண்டிருந்தனர்.

அவர்கள் பயணம் செய்த கார் புனே– மும்பை நெடுஞ்சாலையில் தெகுரோடு பகுதியில் வந்தபோது, சாலையில் நின்று கொண்டிருந்த ஒரு லாரியின் பின்னால் எதிர்பாராதவிதமாக பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.

அதிகாரி சாவு

இந்த விபத்தில் காரில் இருந்த வருமான வரித்துறை இன்ஸ்பெக்டர் அபிஷேக் தியாகி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். அதிகாரிகள் ஆனந்த் உபாத்யாய், கே.கே.மிஸ்ரா ஆகியோர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் படுகாயமடைந்த அதிகாரிகள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

மேலும் அபிஷேக் தியாகியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக லாரி டிரைவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.


Next Story