குமரி மாவட்டத்தில் இருந்து கடலுக்குச்சென்ற 8 மீனவர்கள் கதி என்ன?
குமரி மாவட்டத்தில் இருந்து கடலுக்குச்சென்ற 8 மீனவர்கள் கதி என்ன? கரை திரும்பாததால் குடும்பத்தினர் தவிப்பு.
நாகர்கோவில்,
குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே கடற்கரை கிராமமான தூத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சாலோ (வயது 35). இவருக்கு சொந்தமான விசைப்படகில் அவரும், அதே பகுதியை சேர்ந்த கில்பர்ட் (52), அல்ஹரி (50), ஜோசபாஸ் (57) ஆகியோரும் கடலுக்கு மீன் பிடிக்க சென்றிருந்தனர்.
இதே போல் பூத்துறை பகுதியை சேர்ந்த சர்ஜின் (32) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அவரும், அருளப்பன் (36), ராஜேஷ் (28), ஜின் (36) ஆகியோரும் மீன்பிடிக்க சென்றனர். தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று அதிகாலை 3 மணி அளவில் கடலுக்கு புறப்பட்டுள்ளனர்.
வழக்கமாக காலை 9 மணிக்கு கரை திரும்பும் அவர்கள் நேற்று மாலை வரை திரும்பவில்லை. நேற்று கடல் கொந்தளிப்பு அதிகமாக இருந்ததால் கடலுக்குச் சென்ற 8 மீனவர்களின் கதி என்ன? என்பது குறித்த தகவல் எதுவும் தெரியவில்லை. இதனால் அவர்களது குடும்பத்தினரும், உறவினர்களும் பரிதவிப்புக்கு உள்ளாகினர்.