தண்டவாள பராமரிப்பு பணி: மதுரை கோட்டத்தில் பாசஞ்சர் ரெயில்கள் இயக்கப்படும் நேரம் மாற்றம்


தண்டவாள பராமரிப்பு பணி: மதுரை கோட்டத்தில் பாசஞ்சர் ரெயில்கள் இயக்கப்படும் நேரம் மாற்றம்
x
தினத்தந்தி 2 Dec 2017 3:30 AM IST (Updated: 2 Dec 2017 12:13 AM IST)
t-max-icont-min-icon

தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக மதுரை கோட்டத்தில் இயக்கப்படும் ரெயில்களின் நேரத்தில் செய்யப்பட்ட மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மதுரை,

மதுரை கோட்ட ரெயில்வேக்கு உட்பட்ட மதுரை–விருதுநகர், மானாமதுரை–ராமேசுவரம், நெல்லை–திருச்செந்தூர், விருதுநகர்–மணியாச்சி ஆகிய ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள பாதையில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. இதனால் அந்த பாதையில் இயக்கப்படும் ரெயில்களின் நேரத்தில் நாளை(ஞாயிற்றுக்கிழமை) முதல் வருகிற 20–ந் தேதி வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றம் திங்கட்கிழமை, வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகள் தவிர பிற நாட்களில் மட்டும் இருக்கும்.

அதன்படி, நெல்லை–திருச்செந்தூர் பாசஞ்சர் ரெயில் நெல்லையில் இருந்து காலை 9.30 மணிக்கு பதிலாக காலை 11 மணிக்கு புறப்படும். தூத்துக்குடி–திருச்செந்தூர் பாசஞ்சர் ரெயில், திருச்செந்தூர் ரெயில் நிலையத்துக்கு மதியம் 1.10 மணிக்கு பதிலாக மதியம் 1.45 மணிக்கு சென்றடையும். திருச்செந்தூர்–பாலக்காடு பாசஞ்சர் ரெயில் திருச்செந்தூரில் இருந்து காலை 11.10 மணிக்கு பதிலாக மதியம் 12.20 மணிக்கு புறப்படும். ஈரோடு–நெல்லை பாசஞ்சர் ரெயில் நெல்லை ரெயில்நிலையத்துக்கு இரவு 10.40 மணிக்கு பதிலாக இரவு 11.45 மணிக்கு வந்து சேரும். மதுரை–திண்டுக்கல் பாசஞ்சர் ரெயில் திண்டுக்கல் ரெயில்நிலையத்துக்கு இரவு 7.50 மணிக்கு பதிலாக இரவு 8.20 மணிக்கு சென்றடையும்.

கோவை–நாகர்கோவில் பாசஞ்சர் ரெயில் மதுரை, மானாமதுரை, விருதுநகர் வழியாக இயக்கப்படும். மறுமார்க்கத்தில் நாகர்கோவில்–கோவை பாசஞ்சர் ரெயில் விருதுநகர், மானாமதுரை, மதுரை வழியாக இயக்கப்படும். இந்த ரெயில் வருகிற 11–ந் தேதி மட்டும் சாத்தூர்–விருதுநகர் இடையே மட்டும் ரத்து செய்யப்படுகிறது. செங்கோட்டை–மதுரை பாசஞ்சர் ரெயில் மதுரை ரெயில்நிலையத்துக்கு மாலை 3.45 மணிக்கு பதிலாக மாலை 4.15 மணிக்கு வந்து சேரும். திருச்செந்தூர்–பாலக்காடு பாசஞ்சர் ரெயில் பொள்ளாச்சி ரெயில் நிலையத்துக்கு இரவு 9 மணிக்கு பதிலாக இரவு 10 மணிக்கு சென்றடையும்.

நெல்லை–ஈரோடு, மயிலாடுதுறை பாசஞ்சர் ரெயில் நெல்லை ரெயில் நிலையத்தில் இருந்து காலை 5.30 மணிக்கு பதிலாக காலை 6.30 மணிக்கு புறப்படும். மைசூரு–தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரெயில் தூத்துக்குடி ரெயில்நிலையத்துக்கு காலை 11.15 மணிக்கு பதிலாக காலை 11.45 மணிக்கு சென்றடையும். சென்னை சென்டிரல்–நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் நல்லி ரெயில்நிலையத்தில் சுமார் அரை மணி நேரம் மட்டும் நிறுத்தி வைக்கப்படும்.செங்கோட்டை–மதுரை பாசஞ்சர் ரெயில் மதுரை ரெயில்நிலையத்துக்கு காலை 10.45 மணிக்கு பதிலாக காலை 11.05 மணிக்கு வந்து சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story