ஆசனூர் அருகே கேர்மாளம் ரோட்டில் நடமாடிய சிறுத்தை


ஆசனூர் அருகே கேர்மாளம் ரோட்டில் நடமாடிய சிறுத்தை
x
தினத்தந்தி 1 Dec 2017 9:45 PM GMT (Updated: 1 Dec 2017 7:40 PM GMT)

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட ஆசனுர் வனச்சரகத்தில் சிறுத்தை, புலி, கழுதைப்புலி, செந்நாய்கள் அதிக அளவில் உள்ளன.

தாளவாடி,

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட ஆசனுர் வனச்சரகத்தில் சிறுத்தை, புலி, கழுதைப்புலி, செந்நாய்கள் அதிக அளவில் உள்ளன. இந்தநிலையில் கேர்மாளம் கிராமத்தை சேர்ந்த சிவா (வயது 35) என்பவர் ஆசனூரில் இருந்து நேற்று மதியம் காரில் கேர்மாளம் சென்றுகொண்டு இருந்தார். அப்போது மாவள்ளம்பிரிவு என்ற இடம் அருகே ரோட்டில் ஒரு சிறுத்தை நிற்பதை பார்த்தார். உடனே காரை சற்று தூரத்திலேயே நிறுத்திக்கொண்டார். பின்னர் தன்னுடைய செல்போனில் சிறுத்தையை படம் பிடித்தார். சிறுத்தை ரோட்டில் அங்கும் நடமாடியது. 10 நிமிடம் கழித்து காட்டுக்குள் சிறுத்தை சென்றது. அதன்பின்னர் சிவா காரை எடுத்துக்கொண்டு கேர்மாளம் சென்றார். பகல் நேரத்திலேயே ரோட்டில் சிறுத்தை நின்றதால் கேர்மாளம் ரோடு வழியாக வாகனங்களில் செல்பவர்கள் அச்சத்தில் உள்ளார்கள்.


Next Story