வியாழன் கிரகத்தில் வீசிய கடும் புயல்!
வியாழன் கிரகத்தில் கடும் புயல் வீசியிருப்பதை ‘நாசா’ அனுப்பிய ‘ஜூனோ’ விண்கலம் கண்டுபிடித்துள்ளது.
வியாழனை ஆய்வு செய்வதற்கு என்றே அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி மையம் ‘ஜூனோ’ என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளது.
அதில் பொருத்தப்பட்டுள்ள சக்தி வாய்ந்த காமிரா, வியாழன் கிரகத்தில் ஏற்படும் பருவ நிலை மாற்றம் மற்றும் தட்பவெப்ப நிலைகளை படமாக எடுத்து பூமிக்கு அனுப்பி வருகிறது.
அவ்வாறு சமீபத்தில் ஜூனோ விண் கலம் எடுத்து அனுப்பிய புகைப்படத்தில் வியாழன் கிரகத்தில் கடும் புயல் வீசி யிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது இக்கிரகத்தின் வடபகுதியில் ஏற்பட்டுள்ளது.
இந்தப் புகைப்படம் அனுப்பப்பட்டபோது, குறிப்பிட்ட விண்கலமானது வியாழன் கிரகத்தின் மேகக் கூட்டங்களின் மீது 10,108 கி.மீ. தூரத்தில் பறந்தது.
புகைப்படத்தில் வியாழன் கிரகத்தில் புயல் வீசும்போது மேகக் கூட்டங்கள் கலைந்து இருப்பது தெரிகிறது. கருமேகங்களும் திரண்டுள்ளன.
Related Tags :
Next Story