தூத்துக்குடி மாவட்டத்தில் மழைக்கு 24 வீடுகள் சேதம் காயல்பட்டினத்தில் 84 மி.மீ. மழை பதிவானது
தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த தொடர் மழைக்கு 24 வீடுகள் சேதம் அடைந்தது. அதிகபட்சமாக காயல்பட்டினத்தில் 84 மில்லி மீட்டர் மழை பதிவானது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த தொடர் மழைக்கு 24 வீடுகள் சேதம் அடைந்தது. அதிகபட்சமாக காயல்பட்டினத்தில் 84 மில்லி மீட்டர் மழை பதிவானது.
தொடர் மழைவங்க கடலில் உருவான ஒகி புயல் காரணமாக கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக பலத்த காற்றுடன் மழை பெய்தது. 3–வது நாளான நேற்று தூத்துக்குடியில் லேசான சாரல் மழை பெய்தது.
இந்த தொடர் மழை காரணமாக, தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு 24 வீடுகள் சேதம் அடைந்தன. இதில் திருச்செந்தூரில் 2 வீடுகளும், சாத்தான்குளத்தில் 1 வீடும் முழுமையாக சேதம் அடைந்தது. தூத்துக்குடி தாலுகா பகுதிகளில் 4 வீடுகள், திருச்செந்தூர் தாலுகா பகுதிகளில் 3 வீடுகள், சாத்தான்குளத்தில் 2 வீடுகள் உள்பட மாவட்டம் முழுவதும் மொத்தம் 21 வீடுகள் பகுதி சேதம் அடைந்தன. ஒருசில இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன.
மழை அளவுதூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் அதிகபட்சமாக காயல்பட்டினத்தில் 84.40 மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளது. குறைந்தபட்சமாக மணியாச்சியில் 2 மில்லி மீட்டரும், கீழஅரசடியில் 3 மில்லி மீட்டரும் மழை பெய்தது.
நேற்று காலை 8 மணி நிலவரப்படி முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:–
கோவில்பட்டி –11
ஓட்டப்பிடாரம்–24
சாத்தான்குளம்–37
ஸ்ரீவைகுண்டம்–35
தூத்துக்குடி–40.20
திருச்செந்தூர் –59
விளாத்திகுளம்–20
கயத்தாறு–28
காயல்பட்டினம்–84.40
குலசேகரன்பட்டினம் –66
கீழஅரசடி–3
எட்டயபுரம்–29
கடம்பூர்–12
மணியாச்சி–2
வேடநத்தம்–20
காடல்குடி–16
வைப்பாறு–29
கழுகுமலை–7