விளாத்திகுளம், கோவில்பட்டியில் போலீஸ் டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கர் ஆய்வு

விளாத்திகுளம், கோவில்பட்டியில் போலீஸ் டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கர் ஆய்வு
x
தினத்தந்தி 3 Dec 2017 2:00 AM IST (Updated: 2 Dec 2017 7:47 PM IST)
t-max-icont-min-icon

விளாத்திகுளம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கர் நேற்று காலையில் ஆய்வு செய்தார்.

விளாத்திகுளம்,

விளாத்திகுளம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கர் நேற்று காலையில் ஆய்வு செய்தார்.

பின்னர் அவர், துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் மரக்கன்று நட்டார். அதன்பிறகு விளாத்திகுளம் போலீஸ் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, விளாத்திகுளம் துணை போலீஸ் சூப்பிரண்டு தர்மலிங்கம், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் செல்வகுமார் (விளாத்திகுளம்), ராஜ் (புதூர்), ராமையா (எட்டயபுரம்), சுப்புலட்சுமி (விளாத்திகுளம் அனைத்து மகளிர் போலீஸ்நிலையம்), ராமலட்சுமி (குளத்தூர்) மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

இதைத்தொடர்ந்து, கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலையம் ஆகியவற்றில் போலீஸ் டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கர் ஆய்வு செய்தார்.

பின்னர் அவர், கோவில்பட்டி மேற்கு போலீஸ்நிலைய வளாகத்தில் மரக்கன்று நட்டார். நிகழ்ச்சியில், கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ், மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

Next Story