வடமாநிலத்தவரை புகழ்ந்து பேசிய முதல்–மந்திரி பொறுப்பற்ற பேச்சை திரும்பப் பெற வேண்டும்


வடமாநிலத்தவரை புகழ்ந்து பேசிய முதல்–மந்திரி பொறுப்பற்ற பேச்சை திரும்பப் பெற வேண்டும்
x
தினத்தந்தி 2 Dec 2017 10:29 PM GMT (Updated: 2 Dec 2017 10:29 PM GMT)

வடமாநிலத்தைவரை புகழ்ந்து பேசிய முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தனது பொறுப்பற்ற பேச்சை திரும்பப் பெற வேண்டும் என சிவசேனா தெரிவித்துள்ளது.

மும்பை,

மும்பை காட்கோபரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கலந்துகொண்டு பேசுகையில், ‘‘ இன்றைக்கு நாம் மும்பையையும், மராட்டியத்தையும் பார்க்கும்போது உடனடியாக வட இந்தியர் நம் கண்களில் தென்படுகிறார்கள். இந்த நகரம் ஏராளமானவர்களுக்கு அடைக்கலம் அளித்து இருக்கிறது. இங்கு அடைக்கலம் புகுந்தவர்கள், மும்பையில் கவுரவத்தை உயர்த்தி இருக்கின்றனர். இன்றைக்கு மும்பையில் அடைக்கலம் புகுந்த வட இந்தியர்கள், நகரின் கவுரவத்தை உயர்ந்த பாடுபடுகிறார்கள் என்று உறுதியாக சொல்ல முடியும் ’’ என்றார்.

இவரின் இந்த பேச்சுக்கு நவநிர்மாண் சேனா கட்சி கடும் கண்டனம் தெரிவித்தது. தேவேந்திர பட்னாவிஸ் வடமாநிலத்தவரின் வாக்கு வங்கியை குறிவைத்தே இவ்வாறு பேசுவதாக கூற்றம் சாட்டியது.

தற்போது சிவசேனாவும் இந்த கருத்து எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தங்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கையான ‘சாம்னா’வின் தலையங்கத்தில் முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிசை வசைபாடியுள்ளது.

மேலும் ‘ மராத்தி மக்களுக்கே மும்பையை கொண்டாட முதல் உரிமை உள்ளது. முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிசின் கருத்து மராட்டிய மக்களை அவமதிக்கும் விதமாக உள்ளது. எனவே முதல்–மந்திரி தன் பொறுப்பற்ற பேச்சை திரும்பப்பெற வேண்டும்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.

மேல்–சபை தேர்தல் நெருக்கும் நிலையில் மீண்டும் ஆளும் பா.ஜனதா, சிவசேனா இடையே மோதல் போக்கு தலைதூக்குவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story