திருத்தணி அருகே பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து


திருத்தணி அருகே பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து
x
தினத்தந்தி 4 Dec 2017 4:28 AM IST (Updated: 4 Dec 2017 4:28 AM IST)
t-max-icont-min-icon

திருத்தணி அருகே பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து திருத்தணியை அடுத்த மத்தூரில் குப்பன் என்பவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் குடோன் உள்ளது. அங்கு பெரிய அளவிலான பிளாஸ்டிக் குழாய்கள் மற்றும் பிளாஸ்டிக் தொட்டிகள் வைக்கப்பட்டிருந்தது.

திருத்தணி,

திருத்தணியை அடுத்த மத்தூரில் குப்பன் என்பவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் குடோன் உள்ளது. அங்கு பெரிய அளவிலான பிளாஸ்டிக் குழாய்கள் மற்றும் பிளாஸ்டிக் தொட்டிகள் வைக்கப்பட்டிருந்தது. நேற்று ஞாயிற்றுக்கிழமை, விடுமுறை நாள் என்பதால் குடோன் மூடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நேற்று மதியம் 12 மணி அளவில் குடோனில் இருந்து திடீரென புகை வந்தது. இதை பார்த்த அந்த பகுதி மக்கள் அதன் உரிமையாளர் குப்பனுக்கு தகவல் தெரிவித்தனர். அதற்குள் தீ மளமளவென பற்றி எரிய ஆரம்பித்தது.

தகவல் அறிந்த திருத்தணி தீயணைப்புத்துறையினர், திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசந்திரன், இன்ஸ்பெக்டர் விநாயகம், சப்–இன்ஸ்பெக்டர் சுரேந்திரன் மற்றும் போலீசார் அங்கு விரைந்தனர். இதற்கிடையில் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. அந்த பகுதியில் யாரும் சென்று விடாதபடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து 4 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்து தொடர்பாக திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து நடந்ததா ? அல்லது யாரேனும் குடோனுக்கு தீ வைத்தார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story