சென்னை புறநகரில் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிப்பு


சென்னை புறநகரில் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிப்பு
x
தினத்தந்தி 6 Dec 2017 3:45 AM IST (Updated: 6 Dec 2017 12:36 AM IST)
t-max-icont-min-icon

சென்னை புறநகர் பகுதிகளில் ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவுதினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.

தாம்பரம்,

மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு தினம் சென்னை புறநகர் பகுதிகளில் நேற்று அனுசரிக்கப்பட்டது. காஞ்சீபுரம் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பம்மல், அனகாபுத்தூர், பல்லாவரம், தாம்பரம் உள்ளிட்ட இடங்களில் ஜெயலலிதா நினைவுதினத்தையொட்டி நேற்று ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மாவட்டச்செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் பம்மலில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதேபோல் தாம்பரம், பல்லாவரம் சட்டமன்ற தொகுதிகளில் உள்ள அனைத்து நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளின் வார்டுகளிலும் மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு அ.தி.மு.க. தொண்டர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

திருவொற்றியூர் பெரியார் நகரில் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் மாவட்டப்பொருளாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.

அமைச்சர்கள் க.பாண்டியராஜன், பெஞ்சமின், மாவட்டச் செயலாளர் அலெக்சாண்டர் ஆகியோர் கலந்துகொண்டு ஜெயலலிதா படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதனைத்தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.


Next Story