காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஜெயலலிதா நினைவுதினம் அனுசரிப்பு
காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஜெயலலிதா நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது.
காஞ்சீபுரம்,
மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவுதினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி காஞ்சீபுரம் காந்திரோடு தேரடியில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா படத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ. வாலாஜாபாத் கணேசன், அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் வி.சோமசுந்தரம், முன்னாள் எம்.பி. காஞ்சி பன்னீர்செல்வம், ஜெயலலிதா பேரவை செயலாளர் கே.யூ.எஸ்.சோமசுந்தரம், மாவட்ட மாணவரணி செயலாளர் வள்ளிநாயகம், ஒன்றிய செயலாளர் தும்பவனம் ஜீவானந்தம், அ.தி.மு.க. நிர்வாகி வடகால் சவரிங்கம் உள்பட பலர் கலந்துகொண்டு கருப்பு சட்டை அணிந்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மேலும் காஞ்சீபுரம் பஸ்நிலையம், பூக்கடைசத்திரம், ஓரிக்கை போன்ற பகுதிகளில் ஜெயலலிதா படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்கள். வாலாஜாபாத் பஸ் நிலையம் அருகில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதாவின் படத்திற்கு முள்ளாள் எம்.எல்.ஏ. வாலாஜாபாத் பா.கணேசன், ஒன்றிய செயலாளர் அக்ரி கே.நாகராஜ், நிர்வாகிகள் தென்னேரி என்.எம்.வரதராஜுலு, எஸ்.எஸ்.ஆர்.சத்தியா உள்பட ஏராளமான நிர்வாகிகளும், தொண்டர்களும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.
காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டை அடுத்த ஆலப்பாக்கம் ஊராட்சியில் ஜெயலலிதா நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவபடத்திற்கு முன்னாள் ஊராட்சிமன்ற தலைவரும் அண்ணா தொழிற்சங்க செலாளருமான கே.சல்குரு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
செங்கல்பட்டு அடுத்த சிங்கபெருமாள்கோவிலில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்தில் ஜெயலலிதாவின் உருவபடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதற்கு காட்டாங்கொளத்தூர் ஒன்றிய செயலாளர் கவுஸ்பாஷா தலைமையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் பொதுமக்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் 1,500 பேருக்கு ஒன்றியச்செயலாளர் கவுஸ்பாஷா அன்னதானம் வழங்கினார். நிகழ்ச்சியில் ஊராட்சி அ.தி.மு.க. செயலாளர் சந்தானகிருஷ்ணன், ஒன்றியபொருளாளர் பலராமன், அஞ்சூர் ஜெயபால், கே.வி.என். பன்னீர்செல்வம், துளசிகண்ணன், ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதுபோல திருத்தேரி அ.தி.மு.க. சார்பில் செயலாளர் சைக்கிள் கடை ராஜேந்திரன், பொன்னரசு, பாரேரி அ.தி.மு.க. சார்பில் கிளைபிரதிநிதி ரவி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சதீஷ் ஆகியோர் ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள்.
மறைமலைநகரில் உள்ள காஞ்சீபுரம் மத்திய மாவட்ட எம்.ஜி.ஆர்.இளைஞரணி தலைவரும், முன்னாள் நகர் மன்ற தலைவருமான எம்.ஜி.கே.கோபிகண்ணன் அலுவலகம், நகராட்சியில் உள்ள 4,5,6,7,16 ஆகிய வார்டுகள், மற்றும் மறைமலைநகர் நகராட்சி அலுவலகம் போன்ற இடங்களில் ஜெயலலிதாவின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. அங்கு ஜெயலலிதாவின் உருவபடங்களை வைத்து வண்ண மலர்களால் அலங்கரித்து முன்னாள் நகர் மன்ற தலைவரும், காஞ்சீபுரம் மத்திய மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி தலைவருமான எம்.ஜி.கே.கோபிகண்ணன் மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மேலும் ஏழை–எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் காட்டாங்கொளத்தூர் ஒன்றிய செயலாளரும், சிங்கபெருமாள் கோவில் கூட்டுறவு நகர வங்கி தலைவருமாக எஸ்.கவுஸ்பாஷா, ஒன்றிய பொருளாளர் எஸ்.பலராமன், நகர நிர்வாகிகள் ஆர்.தசரதன், பி.காளி, பி.அல்லிமுத்து, ஸ்ரீமதி திருமாறன், தமிழரசு, ராஜகோபால், மைக்கேல், எம்.ஜி.கே.பாரதிராஜா உள்பட பலர் கலந்துகொண்டு ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் அனைவரும் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.