தஞ்சை அருகே விவசாயியிடம் ரூ.1,500 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக பெண் அதிகாரி கைது


தஞ்சை அருகே விவசாயியிடம் ரூ.1,500 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக பெண் அதிகாரி கைது
x
தினத்தந்தி 6 Dec 2017 3:45 AM IST (Updated: 6 Dec 2017 2:10 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை அருகே விவசாயியிடம் ரூ.1,500 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக பெண் அதிகாரி கைது செய்யப்பட்டார்.

திருக்காட்டுப்பள்ளி,

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருபவர் சுமதி (வயது42). இவருடைய கணவர் ஜெயக்குமார். சுமதி திருச்சி கே.கே.நகரில் வசித்து வருகிறார். செங்கிப்பட்டி கீழத்தெருவை சேர்ந்தவர் ஜெய்கணேஷ் (38). விவசாயி. இவர் அந்த பகுதியில் சொந்தமாக நிலம் வாங்கினார்.

இதற்கான பட்டா மாறுதலுக்காக கிராம நிர்வாக அதிகாரி சுமதியிடம் விண்ணப்பித்தார். அதற்கு அவர் பட்டா மாறுதல் பரிந்துரை செய்வதற்கு ரூ.1,500 லஞ்சம் கேட்டார். ஆனால் இதனை கொடுப்பதற்கு ஜெய்கணேஷ் விரும்பவில்லை. இதையடுத்து அவர் தஞ்சை லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார்.

கைது

புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர்கள் வெங்கடேசன், தமிழ்ச்செல்வி மற்றும் போலீசார் ரசாயன பவுடர் தடவிய ரூ.1,500-ஐ கொடுத்து சுமதியிடம் கொடுக்குமாறு கூறினர். அதன்பேரில் ஜெய்கணேஷ் பணத்தை எடுத்துக்கொண்டு செங்கிப்பட்டி- ஆச்சாம்பட்டி சாலையில் உள்ள கிராம நிர்வாக அதிகாரி அலுவலகத்துக்கு சென்று அங்கு இருந்த சுமதியிடம் கொடுத்தார். அப்போது அங்கு வந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் சுமதியை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.


Next Story