பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு புதுவையில் போலீசார் தீவிர வாகன சோதனை


பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு புதுவையில் போலீசார் தீவிர வாகன சோதனை
x
தினத்தந்தி 6 Dec 2017 3:30 AM IST (Updated: 6 Dec 2017 2:27 AM IST)
t-max-icont-min-icon

பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு புதுவையில் நேற்று போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தினர்.

புதுச்சேரி,

டிசம்பர் 6–ந் தேதி (இன்று) பாபர் மசூதி இடிப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு ஏதேனும் அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் இருக்க நாடு முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. புதுவையில் டி.ஜி.பி. சுனில் குமார் கவுதம் உத்தரவின் பேரில் நகரின் முக்கியமான பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

புதுச்சேரி ரெயில் நிலையத்தில் ஒதியஞ்சாலை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் கீர்த்தி மற்றும் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது வெளிமாநிலத்தில் இருந்து புதுவைக்கு வந்த பயணிகளின் உடமைகளை மெட்டல் டிடெக்டர் உதவியுடன் சோதனை நடத்தினர். இதே போல் புதிய பஸ் நிலையத்தில் உருளையன்பேட்டை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது வெளியிடங்களில் இருந்து புதுவைக்கு வந்த பயணிகளிடம் சோதனை நடத்தினர்.

இதே போல் போலீசார் புதுவை எல்லை பகுதிகளில் சோதனைச்சாவடிகள் அமைத்து வெளிமாநிலங்களில் இருந்து புதுவைக்கு வந்த வாகனங்களை சோதனை நடத்தினர். மேலும் மரப்பாலம் சந்திப்பில் முதலியார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி மற்றும் போலீசார் சோதனை நடத்தினர். இதே போல் கோரிமேடு, குமரகுரு பள்ளம், சோனாம்பாளையம், ரெட்டியார்பாளையம், முத்தியால்பேட்டை உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் அந்தந்த எல்லைக்கு உள்பட்ட போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தினர்.

அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் யாராவது தெரிந்தால் அவர்களை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். இதே போல் புதுவை முழுவதும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story