வீட்டை சேதப்படுத்தியவர்களை கண்டித்து பொதுமக்கள், வியாபாரிகள் உண்ணாவிரதம்- கடையடைப்பு


வீட்டை சேதப்படுத்தியவர்களை கண்டித்து பொதுமக்கள், வியாபாரிகள் உண்ணாவிரதம்- கடையடைப்பு
x
தினத்தந்தி 7 Dec 2017 3:45 AM IST (Updated: 7 Dec 2017 1:17 AM IST)
t-max-icont-min-icon

வீட்டை சேதப்படுத்தியவர்களை கண்டித்து விக்கிரமங்கலத்தில் பொதுமக்கள், வியாபாரிகள் உண்ணாவிரதம்- கடையடைப்பு

விக்கிரமங்கலம்,

விக்கிரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ரத்தினம். இவரது மகன்கள் சுப்பிரமணியன் (வயது 60), சங்கர் (47). இந்நிலையில் பூர்வீக வீடு மற்றும் இடத்தை கிழநத்தம் கிராமத்தை சேர்ந்த கண்ணனிடம் (42), சுப்பிரமணியன், சங்கருக்கு தெரியாமல் முறைகேடாக விற்றுள்ளார். இதையடுத்து கண்ணன், சங்கர் வீட்டிற்கு வந்து இடத்தை காலி செய்து தரும்படி கூறியுள்ளார். அதற்கு சங்கர் ஜெயங்கொண்டம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளதாக கூறியுள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று கண்ணன், அவரது ஆதரவாளர்கள் 50 பேருடன் வந்து சங்கரை வீட்டை காலி செய்யும் படி கூறி வீட்டில் உள்ள பொருட்களை சேதப் படுத்தினார். இதுகுறித்த புகாரின் பேரில் விக்கிரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணன் உள்பட 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனை கண்டித்து விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் சங்கரின் வீட்டின் மீது தாக்குதல் நடத்திய கண்ணன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 50 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சேதப்படுத்திய பொருட்களுக்கு இழப்பீடு வழங்கவேண்டும், வீட்டிற்கு பாதுகாப்பு அளித்து நிவாரணம் வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அதை கண்டித்து வியாபாரிகள் கடைகளை அடைத்திருந்தனர். 

Next Story