சி.எஸ்.எம்.டி.– கோரேகாவ் இடையே ஜனவரியில் மின்சார ரெயில் சேவை எம்.ஆர்.வி.சி. சேர்மன் தகவல்
சி.எஸ்.எம்.டி.– கோரேகாவ் இடையே ஜனவரி மாதம் முதல் மின்சார ரெயில் சேவை தொடங்கும் என எம்.ஆர்.வி.சி. சேர்மன் கூறினார். துறைமுக வழித்தடம் நீட்டிப்பு மும்பையில் துறைமுக வழித்தடத்தில் தற்போது சி.எஸ்.எம்.டி.– பன்வெல், அந்தேரி இடையே மின்சார ரெயில் சேவைகள் இயக்க
மும்பை,
சி.எஸ்.எம்.டி.– கோரேகாவ் இடையே ஜனவரி மாதம் முதல் மின்சார ரெயில் சேவை தொடங்கும் என எம்.ஆர்.வி.சி. சேர்மன் கூறினார்.
துறைமுக வழித்தடம் நீட்டிப்புமும்பையில் துறைமுக வழித்தடத்தில் தற்போது சி.எஸ்.எம்.டி.– பன்வெல், அந்தேரி இடையே மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில், சி.எஸ்.எம்.டி.– அந்தேரி இடையே மேற்கு ரெயில்வே சார்பில் 37, மத்திய ரெயில்வே சார்பில் 52 சேவைகள் என தினசரி 89 மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த சேவைகளை 5 லட்சம் பயணிகள் வரை பயன்படுத்தி வருகிறார்கள்.
இந்தநிலையில், இந்த வழித்தடம் அந்தேரியில் இருந்து கோரேகாவ் வரையிலும் நீட்டிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
2014–ம் ஆண்டே தண்டவாளம் நீட்டிக்கும் பணியை முடித்து ரெயில் சேவையை தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஆனால் குறித்த காலத்தில் பணிகள் முடிக்கப்படவில்லை.
ஜனவரியில்...தற்போது அந்தேரியில் இருந்து கோரேகாவ் வரையிலான தண்டவாள நீட்டிப்பு பணிகள் முடிவடைந்து விட்டன. கடந்த ஜூன் மாதம் ரெயில் என்ஜினை கொண்டு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.
இந்தநிலையில், வரும் ஜனவரி மாதம் முதல் சி.எஸ்.எம்.டி.– கோரேகாவ் இடையே மின்சார ரெயில் சேவை தொடங்கும் என மும்பை ரெயில் விகாஸ் கழக (எம்.ஆர்.வி.சி.) சேர்மனும், நிர்வாக இயக்குனருமான பிரபாத் சஹாய் கூறினார். இதுபற்றி அவர் மேலும் கூறுகையில், ‘‘துறைமுக ரெயில் வழித்தடம் அந்தேரியில் இருந்து கோரேகாவ் வரையில் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. அந்தேரி– கோரேகாவ் இடையே விரைவில் ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஆய்வு செய்வார். அதன்பின்னர் சி.எஸ்.டி.– கோரேகாவ் இடையே வருகிற ஜனவரி மாதத்தில் ரெயில் சேவை தொடங்கப்படும்’’, என்றார்.