மும்பை– புனே நெடுஞ்சாலையில் நடந்த வெவ்வேறு விபத்துகளில் குழந்தை உள்பட 5 பேர் பலி


மும்பை– புனே நெடுஞ்சாலையில் நடந்த வெவ்வேறு விபத்துகளில் குழந்தை உள்பட 5 பேர் பலி
x
தினத்தந்தி 7 Dec 2017 3:39 AM IST (Updated: 7 Dec 2017 3:39 AM IST)
t-max-icont-min-icon

மும்பை– புனே நெடுஞ்சாலையில் நடந்த வெவ்வேறு விபத்துகளில் சிக்கி குழந்தை உள்பட 5 பேர் பலியாகினர்.

மும்பை,

மும்பை– புனே நெடுஞ்சாலையில் நடந்த வெவ்வேறு விபத்துகளில் சிக்கி குழந்தை உள்பட 5 பேர் பலியாகினர்.

விபத்து

மும்பை காலாசவுக்கியை சேர்ந்தவர் ரத்தன் ராஜ்புத்(வயது39). இவர் சம்பவத்தன்று அதிகாலை 2 மணி அளவில் சாங்கிலி நோக்கி மும்பை–புனே நெடுஞ்சாலையில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் வேகமாக வந்த மினிவேன் ஒன்று காரின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ரத்தன் ராஜ்புத் பலியானார்.

மற்றொரு சம்பவத்தில் கர்ஜத்தை சேர்ந்த அங்குஷ் கடு(46) என்பவர் தான் ஓட்டிவந்த டெம்போவை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு, அங்குள்ள சாலையை கடந்துகொண்டிருந்தார். அப்போது புனே நோக்கி வந்த சிவ்னேரி பஸ் அவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். இதில், பஸ் டிரைவர் கைது செய்யப்பட்டார்.

5 பேர் பலி

இதுபோல் நேற்று முன்தினம் காலை 9.30 மணி அளவில் ரபாலேவை சேர்ந்த சரத் என்பவர் மும்பை– புனே நெடுஞ்சாலையில் ஓட்டிச்சென்ற வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சரத் வாகனத்தில் இருந்து தூக்கிவீசப்பட்டு சாலையில் விழுந்தார். இதில், அவர் அந்த வழியாக வந்த இன்னொரு வாகனத்தின் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

மற்றொரு சம்பவத்தில் மதியம் 2 மணி அளவில் அடுஷி குகை அருகே வந்த கன்டெய்னர் லாரி ஒன்று திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அந்த வழியாக வந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிரைவர் உமேஷ் மற்றும் 18 மாத குழந்தை அதித்துவா ஆகிய 2 பேர் பலியானார்கள். மேலும் 3 பெண்கள் படுகாயமடைந்தனர்.

மும்பை– புனே நெடுஞ்சாலையில் 5 பேரை பலிகொண்ட இந்த விபத்துகள் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story