ஆற்றை தூர்வாரக்கோரி கிராம மக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
கூத்தாநல்லூர் அருகே ஆற்றை தூர்வாரக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கூத்தாநல்லூர்,
கூத்தாநல்லூர் அருகே குலமாணிக்கத்தில் கடுஉருட்டி ஆறு செல்கிறது. இந்த ஆற்றின் மூலம் அப்பகுதியை சுற்றியுள்ள 4 ஆயிரத்து 464 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்த நிலையில் ஆறு தூர்வாரப்படாததால் ஆண்டுதோறும் பெய்து வரும் மழையால் சேந்தங்குடி, புத்தகரம், பொய்கைநல்லூர், மாவட்டங்குடி, கோட்டகம், லெட்சுமிநாராயணபுரம், பாலக்குறிச்சி, விசாலாட்சி புரம், அன்னுக்குடி, குலமாணிக்கம், ராமநாதபுரம், பெரியகுருவாடி, கிளியனூர், சோலாட்சி, மணக்கரை, வடவேற்குடி, கொத்தூர், மன்னஞ்சி, பள்ளிவர்த்தி, செருவாமணி உள்ளிட்ட 50 கிராமங்களில் வயல்களில் மழைநீர் தேங்கி நெற்பயிர்கள் அழுகி வருகின்றன.
இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே கடுஉருட்டி ஆற்றினை 8 கி.மீ. தூரத்திற்கு உடனடியாக தூர்வார வேண்டும். நடப்பாண்டில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை பார்வையிட்டு, ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கூத்தாநல்லூர் அருகே உள்ள கமலாபுரத்தில் நேற்று கிராம மக்கள், விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கூத்தாநல்லூர் தாசில்தார் செல்வி, பொதுப்பணித்துறை பொறியாளர் சுகேந்திரன், வருவாய் ஆய்வாளர்கள் ராஜேஸ்வரி (கூத்தாநல்லூர்), பிரதீபா (வடபாதிமங்கலம்) ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் கோரிக்கைகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் சாலை மறியலை கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர்.
இதனால் திருவாரூர்- மன்னார்குடி சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Tags :
Next Story