மைனர்பெண்ணை பலாத்காரம் செய்தவருக்கு 20 ஆண்டு ஜெயில் பெங்களூரு கோர்ட்டு உத்தரவு


மைனர்பெண்ணை பலாத்காரம் செய்தவருக்கு 20 ஆண்டு ஜெயில் பெங்களூரு கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 8 Dec 2017 3:15 AM IST (Updated: 8 Dec 2017 2:55 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில், மைனர்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து பெங்களூரு கோர்ட்டு உத்தரவிட்டது.

பெங்களூரு,

பெங்களூருவில், மைனர்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து பெங்களூரு கோர்ட்டு உத்தரவிட்டது.

மைனர்பெண் பலாத்காரம்

பெங்களூரு ஞானபாரதியில் வசித்து வருபவர் சரவணா. இவர், 13 வயது சிறுமியை தனது வீட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும், சம்பவம் குறித்து வெளியில் கூறக்கூடாது என அவர் சிறுமியை மிரட்டியதோடு, அவளுக்கு சாப்பிட உணவு கொடுத்து, ரூ.20–ம் கொடுத்து அவளை அங்கிருந்து அனுப்பியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் கடந்த 2014–ம் ஆண்டு அக்டோபர் மாதம் 14–ந் தேதி நடந்தது.

மிரட்டல் காரணமாக சம்பவம் குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறவில்லை. இந்த நிலையில், அவளுடைய உடலில் ஏற்பட்ட மாற்றங்களால் சந்தேகம் அடைந்த பெற்றோர் அவளிடம் விசாரித்தனர். விசாரணையில், சிறுமி தனக்கு நடந்த கொடுமை குறித்து கண்ணீருடன் தனது தாயிடம் கூறினாள். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவளது தாய் உடனடியாக ஞானபாரதி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணாவை கைது செய்தனர்.

20 ஆண்டு ஜெயில்

இதுதொடர்பான வழக்கு பெங்களூரு 71–வது சிட்டி சிவில் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி சச்சின் கவுசிக் நேற்று முன்தினம் தீர்ப்பு கூறினார்.

அதில், ‘மைனர்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட சரவணா மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணம் ஆகி உள்ளதால் அவருக்கு 20 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.55 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story