பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கக்கோரி உண்ணாவிரதம் விவசாயிகள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்


பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கக்கோரி உண்ணாவிரதம் விவசாயிகள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 9 Dec 2017 3:38 AM IST (Updated: 9 Dec 2017 3:38 AM IST)
t-max-icont-min-icon

பயிர்க்காப்பீட்டு தொகையை வழங்கக்கோரி உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்து விவசாயிகள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருவையாறு,

திருவையாறு அருகே உள்ள மேலதிருப்பூந்துருத்தியில் விவசாயிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு முன்னாள் பேரூராட்சி தலைவர் விஸ்வஜித் காடேராவ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மேலதிருப்பூந்துருத்தி, கருப்பூர், நாகத்தி, திருவாழம்பொழில், உமையவள்ஆற்காடு, வீரசிங்கம்பேட்டை உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர். இதில் பல முறை முறையீடு செய்தும் பயிர்க்காப்பீட்டு தொகையை வழங்காததை கண்டித்தும், பயிர்க்காப்பீட்டு தொகையை உடனடியாக வழங்கக்கோரியும் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்யப்பட்டது.

இதுதொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–பயிர்க்காப்பீட்டு தொகையை வழங்காவிட்டால் மாவட்ட நிர்வாகம், காப்பீட்டு நிறுவனம் மற்றும் அதிகாரிகள் மீது வழக்கு தொடர்வது, உண்ணாவிரத போராட்டத்தில் திரளான விவசாயிகளை கலந்து கொள்ள செய்வது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.


Next Story