திருச்சி–கரூர் சாலையில் மணல் கடத்தி சென்ற 10 லாரிகள் பறிமுதல்


திருச்சி–கரூர் சாலையில் மணல் கடத்தி சென்ற 10 லாரிகள் பறிமுதல்
x
தினத்தந்தி 9 Dec 2017 3:51 AM IST (Updated: 9 Dec 2017 3:51 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி–கரூர் சாலையில் ஜீயபுரம் அருகே மணல் கடத்தி சென்ற 10 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அதன் டிரைவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஜீயபுரம்,

திருச்சி–கரூர் சாலை வழியாக லாரிகளில் மணல் கடத்தி செல்லப்படுவதாக திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கல்யாண்க்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில், ஜீயபுரம் போலீசார் நேற்று அதிகாலை 4 மணியளவில் திருச்சி–கரூர் சாலையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது கரூர் நோக்கி வரிசையாக 10 லாரிகள் வந்தன. அந்த லாரிகளை மடக்கி போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த லாரிகளில் அனுமதியின்றி நாகப்பட்டினம் பகுதியிலிருந்து கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்துக்கு மணல் கடத்தி செல்வது தெரிய வந்த்து. அதன்பேரில் அந்த லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அதனை ஓட்டி வந்த டிரைவர்கள் தஞ்சாவூரை சேர்ந்த குமரன் (வயது36), கரூர் பாபு(40), திருப்பூர் வெள்ளகோவிலை சேர்ந்த சண்முகம்(44), சிதம்பரம்(38), அரவகுறிச்சி செந்தில்வேல்(38), கரூர் ராமசாமி(51), ஆண்டிபாளையம் மதியழகன்(46), கரூர் ஞானசேகரன்(38), மூர்த்தி(38), சிவானந்தம் (48), ஆகியோரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் தாசில்தார் சண்முகம், அந்தநல்லூர் வருவாய் அதிகாரி ஸ்ரீதேவி ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக ஸ்ரீதேவி கொடுத்த புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர், சப்–இன்ஸ்பெக்டர் ராமராஜன் ஆகியோர் லாரி டிரைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். பின்னர் அவர்களை திருச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.



Next Story