மதுபான பாரில் வேலை பார்த்த பெண்ணை கடத்தி கற்பழித்தவருக்கு 10 ஆண்டு ஜெயில் தானே செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு
மதுபான பாரில் வேலை பார்த்த பெண்ணை கடத்தி கற்பழித்தவருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தானே செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
தானே,
மதுபான பாரில் வேலை பார்த்த பெண்ணை கடத்தி கற்பழித்தவருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தானே செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
கடத்தி கற்பழிப்புதானே பகுதியில் உள்ள மதுபான பாரில் 28 வயது பெண் ஒருவர் வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 2016–ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இரவு வேலை முடிந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அஜய்(வயது33) என்பவர் அந்த பெண்ணை கடத்திச்சென்று, ஓட்டல் அறையில் வைத்து கற்பழித்துள்ளார்.
மேலும் அவர் அந்த பெண்ணை பெல்ட்டால் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து பெண் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜயை கைது செய்தனர்.
10 ஆண்டு ஜெயில்இந்த வழக்கு மீதான விசாரணை தானே செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கு விசாரணை முடிந்து நேற்று முன்தினம் நீதிபதி தீர்ப்பு கூறினார்.
இதில், மதுபான பாரில் வேலை பார்த்த பெண்ணை கடத்தி கற்பழித்த அஜய்க்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.