பெண்ணை கழுத்தை நெரித்து கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை கோர்ட்டு தீர்ப்பு
தண்டராம்பட்டு அருகே பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுகா கொட்டையூர் பகுதியை சேர்ந்தவர் மொட்டையன் மகன் ஏழுமலை (வயது 29). இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் ஜெகன்நாதன். இவரது மகள் எஸ்தர். இவர், கடந்த 2008-ம் ஆண்டு ஜனவரி மாதம் 12-ந் தேதி அதிகாலையில் வீட்டின் முன்பு சாணியை கரைத்து தெளித்து கொண்டு இருந்தார். அது தவறுதலாக ஏழுமலையின் மகள் மீது பட்டு உள்ளது.
இதனால் எஸ்தருக்கும், ஏழுமலைக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் அது இருதரப்பினர் மோதலாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த ஏழுமலை, ஜெகன்நாதனின் தாய் உண்ணாமலையை (55) மார்பில் கல்லால் தாக்கி கழுத்தை நெரித்து கொலை செய்தார். இது பற்றிய புகாரின் வாணாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு விசாரணை திருவண்ணாமலை மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் நேற்று வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி மகிழேந்தி, உண்ணாமலையை கொலை செய்த குற்றத்திற்காக ஏழுமலைக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்தார். அபராதம் கட்ட தவறினால் மேலும் 3 ஆண்டு கடுங்காவல் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பு கூறினார். அதை தொடர்ந்து தண்டனை பெற்ற ஏழுமலையை போலீசார் சிறைக்கு அழைத்து சென்றனர்.

Related Tags :
Next Story