ஏலகிரிமலையில் சுற்றுலா மேம்பாட்டு வளர்ச்சி குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது
ஏலகிரிமலையில் சுற்றுலா மேம்பாட்டு வளர்ச்சி குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது.
ஜோலார்பேட்டை,
ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரிமலையில் உள்ள யாத்ரிநிவாஸ் அரசு விடுதியில் சுற்றுலா மேம்பாட்டு வளர்ச்சி குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பல்வேறு துறை அதிகாரிகளிடம் கருத்துகள் கேட்டறிந்து, அதற்கான மேம்படுத்தும் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
ஏலகிரிமலையில் உள்ள படகு இல்லத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைத்தல், படகு ஏரியின் மையத்தில் செயற்கை தீவு அமைத்தல், மலையில் உள்ள குக்கிராமங்களை ஒருங்கிணைத்து சுற்றுலா வளர்ச்சி திட்டம் குறித்தும், ஜலகம்பாறை நீர்வீழ்ச்சியில் குளியல் அறை, கழிவறை, உடை மாற்றும் அறை போன்ற கட்டிடங்களை மேம்படுத்துவதற்கும், நாட்டறம்பள்ளி பகுதியில் உள்ள ராமசமுத்திரம் ஏரியை சுற்றுலா துறையாக மாற்ற வாய்ப்புகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மேலும் இப்பணிகள் குறித்து மாவட்ட சுற்றுலாத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, அதற்கான நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதேபோன்று பேரணாம்பட்டை அடுத்த ஊட்டல் கிராமத்தில் சரஸ்வதி கோவிலை கண்டறியாத ஆன்மிக சுற்றுலா தளமாக மாற்றுதற்கான வளர்ச்சி பணி குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர் ராமன் ஏலகிரிமலையில் சாகச விளையாட்டு நடைபெறும் இடத்திற்கு சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று, இடத்தை ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், ‘பல்வேறு மாநிலம், மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் ஏலகிரிமலைக்கு வந்து செல்கின்றனர். அவர்கள் சாகச விளையாட்டு நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் மற்றும் மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் ஆகியோரிடத்தில் ஆலோசனை மேற்கொண்டு பின்பு சாகச விளையாட்டு நடத்துவது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்றார்.
ஆய்வின்போது, மாவட்ட வன அலுவலர் தேஜஸ்வி, திட்ட அலுவலர் பெரியசாமி, முகமதுரபீக், மாவட்ட சுற்றுலா அலுவலர் ஜான்பிரிட்டோ, மாவட்ட தீயணைப்பு அலுவலர் முருகேசன், திருப்பத்தூர் தாசில்தார் ஸ்ரீராம், வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பரசன், கிராம நிர்வாக அலுவலர் மஸ்தான், ஊரக வளர்ச்சி துறை, வருவாய்துறை, வனத்துறை உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

Related Tags :
Next Story