மந்திரி பங்கஜா முண்டேக்கு சொந்தமான சர்க்கரை ஆலையில் விபத்து: 3 தொழிலாளர்கள் பலி
மந்திரி பங்கஜா முண்டேக்கு சொந்தமான சர்க்கரை ஆலையில் ஏற்பட்ட விபத்தில், 3 தொழிலாளர்கள் உடல் வெந்து பலியானார்கள்.
மும்பை,
மந்திரி பங்கஜா முண்டேக்கு சொந்தமான சர்க்கரை ஆலையில் ஏற்பட்ட விபத்தில், 3 தொழிலாளர்கள் உடல் வெந்து பலியானார்கள்.
பங்கஜா முண்டேஊரக வளர்ச்சித்துறை மந்திரி பங்கஜா முண்டேக்கு சொந்தமாக பீட் மாவட்டம் பார்லியில் சர்க்கரை ஆலை உள்ளது. இங்கு நேற்று முன்தினம் மாலை வழக்கம் போல், தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, உயர தொட்டியில் கரும்புச்சாறு சூடேற்றப்பட்டிருந்தது.
இந்த நிலையில், திடீரென அந்த தொட்டி அப்படியே பெயர்ந்து விழுந்தது. இதனால், கீழே பணியில் ஈடுபட்டிருந்த 16 தொழிலாளர்களின் மீது கரும்புச்சாறு கொட்டியது. அவர்களது உடல் வெந்த நிலையில், வேதனை தாங்க முடியாமல் வலியால் அலறித் துடித்தனர்.
3 தொழிலாளர்கள் சாவுஇதனால், அதிர்ச்சி அடைந்த சக தொழிலாளர்கள், அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். இதில், 3 தொழிலாளர்கள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார்கள். 13 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதில், 3 பேரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் கூறினர். 10 பேர் 90 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மந்திரி பங்கஜா முண்டேக்கு சொந்தமான சர்க்கரை ஆலையில், கரும்புச்சாறு கொட்டி 3 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.