மணல் கடத்திய 3 மாட்டு வண்டிகள் பறிமுதல்


மணல் கடத்திய 3 மாட்டு வண்டிகள் பறிமுதல்
x
தினத்தந்தி 11 Dec 2017 2:00 AM IST (Updated: 10 Dec 2017 6:54 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் அருகே மணல் கடத்திய 3 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

வேலூர்,

வேலூர் தாசில்தார் பாலாஜி மற்றும் வருவாய்த்துறையினர் மணல்கடத்தலை தடுக்க ரோந்து சென்றனர். வேலூரை அடுத்த ரங்காபுரம் பகுதியில் சென்றபோது அதேபகுதியை சேர்ந்த ராமநாதன் (வயது 47), பழனி (50) ஆகியோர் மாட்டுவண்டிகளில் மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து இருவரின் மாட்டுவண்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

அதேபோன்று மணல் கடத்தியதாக வேலூரை அடுத்த சாத்துமதுரையை சேர்ந்த வெங்கடேசனின் மாட்டுவண்டியும் பறிமுதல் செய்யப்பட்டது.



Next Story