செங்கோட்டை அருகே பரிதாபம் இளம்பெண் தற்கொலை போலீஸ் விசாரணை
செங்கோட்டை அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
செங்கோட்டை,
நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள காலாங்கரையில் வசித்து வருபவர் ஜமால் முகைதீன். இவருடைய மகள் ஜன்னத் (வயது 25). இவருக்கும், புளியங்குடி ரகுமத்நகரை சேர்ந்த செய்யது அலி என்பவருக்கும் திருமணம் முடிந்து 8 வருடங்கள் ஆகிறது.இந்தநிலையில் கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் ஜன்னத், தன்னுடைய கணவரை பிரிந்து காலாங்கரையில் உள்ள பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். இவருக்கு ரபீக் (7), சபீக் (3) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். தந்தையிடம் ரபீக்கும், கைக்குழந்தையான சபீக், ஜன்னத்துடனும் வசித்து வந்தனர்.
தற்கொலை
நேற்று முன்தினம் இரவு, ஜன்னத், சபீக்கை தூங்க வைக்க போவதாக தாயாரிடம் கூறிவிட்டு தனது அறைக்கு சென்றார். சிறிது நேரம் கழித்து பேரனுடன் சேர்ந்து மகளும் தூங்கி விட்டாளோ என்று பார்ப்பதற்காக ஜன்னத்தின் தாயார் அந்த அறைக்குள் சென்றார். அங்கு ஜன்னத் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மகளின் உடலை பார்த்து கதறி அழுதார்.
தகவல் அறிந்த செங்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேவபிரியா சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். ஜன்னத் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். இதுதொடர்பாக செங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜன்னத் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story