மர்மமான முறையில் ஓடையில் இறந்து கிடந்த விவசாயி கொலையா? போலீஸ் விசாரணை
பட்டிவீரன்பட்டி அருகே மர்மமான முறையில் விவசாயி, ஓடையில் இறந்து கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பட்டிவீரன்பட்டி,
பட்டிவீரன்பட்டி அருகே வத்தலக்குண்டு-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சங்காரெட்டிகோட்டை வாஞ்சி ஓடையில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். அந்த வழியாக நடந்து சென்றவர்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே இதுகுறித்து அவர்கள் பட்டிவீரன்பட்டி போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இறந்தவரின் உடல் அழுகிய நிலையில் இருந்தது. இதனால் அவர் இறந்து 2 நாட்களுக்கு மேல் இருக்கலாம் என்று போலீசார் கருதினர். அவர் கையில் கருங்கன் என பச்சை குத்தியிருந்தார். இதையடுத்து இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் அவர், தேனி மாவட்டம் கடமலைக் குண்டுவை சேர்ந்த கருங்கன் என்பது தெரியவந்தது. விவசாயியான இவர், ஆடுகளையும் வளர்த்து வந்துள்ளார். இவருக்கு லட்சுமி என்ற மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர். கடந்த 4 நாட்களுக்கு முன்பு வீட்டில் சண்டை போட்டு விட்டு வந்த அவர் பின்னர் வீடு திரும்பவில்லை என்பது தெரியவந்தது.
அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் அழைத்து வந்து கொலை செய்தனரா? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story