திருமாவளவனுக்கு மிரட்டல் விடுத்தவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் கட்சியினர் மனு
திருமாவளவனுக்கு மிரட்டல் விடுத்த நபரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திருப்பூர் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் தமிழ்வேந்தன் தலைமையில் ஏராளமானோர் கலெக்டர் கே.எஸ்.பழனிசாமியை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனின் தலையை வெட்டி கொண்டு வருபவர்களுக்கு ரூ.1 கோடி பரிசாக தருவதாக இந்து முன்னேற்ற கழக நிறுவனர் கோபிநாத் அறிவித்திருந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை சிறையில் அடைத்துள்ளனர். இந்த நபர், அவருடைய கார் மீது அவரே பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு மற்றும் இவரே ஆள் வைத்து இவருடைய அலுவலகத்துக்கு மர்ம பொருள் அனுப்பியது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் ஏற்கனவே நிலுவையில் உள்ளன. பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் இந்த நபரை தாழ்த்தப்பட்டோர் தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழும், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழும் கைது செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பாரதீய மஸ்தூர் சங்கத்தின் திருப்பூர் கிளையை சேர்ந்தவர்கள் தங்கள் கைகளில் மண்சட்டியை ஏந்திக்கொண்டு கலெக்டரிடம் மனு கொடுக்க வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டரை சந்தித்து கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நாங்கள் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தோம். இந்த நிலையில் நிறுவனத்தில் இருந்து கடந்த 1 வருடத்திற்கு முன்பு வேலை நீக்கம் செய்யப்பட்டோம்.
ஆனால் எங்கள் சம்பள பணத்தில் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட பி.எப். எனப்படும் வருங்கால வைப்பு நிதித்தொகையை அரசுக்கு செலுத்தாமலே அந்த நிறுவனத்தினர் இருந்து வந்துள்ளனர். இதனால் அந்த பணத்தை எங்களால் எடுக்க இயலவில்லை. நாங்கள் தற்போது வறுமை சூழலில் இருந்து வருவதால் இந்த வருங்கால வைப்பு நிதி தொகை எங்களுக்கு கிடைக்கும் பொருட்டு அந்த நிறுவனத்திற்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பெருமாநல்லூர் ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சி பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எங்கள் ஊரில் பொதுப்பாதையை தனிநபர் ஒருவர் திடீரென அடைத்து வேலி அமைத்துள்ளார். இதனால் நாங்கள் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் வரை சுற்றி வரவேண்டிய நிலை உள்ளது. இதனால் ஏராளமான பொதுமக்கள் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். இதை கருத்தில் கொண்டு விசாரணை செய்து பொது வழிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சாமுண்டிபுரம், செல்லம்மாள் காலனி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
திருப்பூர் மாநகராட்சி 11-வது வார்டில் சாமுண்டிபுரம் 1-வது வீதி இ.பி.காலனி, சண்முகாநகர், லட்சுமி தியேட்டர் பகுதி, செல்லம்மாள் காலனி மற்றும் பல பகுதிகள் உள்ளன. கடந்த முறை வார்டு பிரிப்பதில் அந்தந்த நகராட்சி, ஊராட்சி பகுதிகள் இருந்தன. அதனால் குடிநீர் கட்டணம், வீட்டு வரி பழைய முறையிலேயே இருந்து வருகிறது. தற்போது செல்லம்மாள் காலனி பகுதியை திருப்பூர் நகராட்சி பகுதி 10-வது வார்டு பகுதியுடன் சேர்ப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் பல்வேறு குழப்பங்கள் ஏற்படும். இதனால் வார்டு பிரிக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும்.

Related Tags :
Next Story