நாமக்கல்லில் சரக்கு ரெயில் என்ஜினில் கோளாறு

நாமக்கல்,
நெய்வேலியில் இருந்து நிலக்கரி பாரம் ஏற்றிக்கொண்டு பெங்களூருவுக்கு சரக்கு ரெயில் ஒன்று சென்று கொண்டு இருந்தது. இந்த ரெயில் நேற்று மதியம் நாமக்கல் ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. அங்கு திடீரென ரெயில் என்ஜினில் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து ரெயில்வே அதிகாரிகள் சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அங்கிருந்து வந்த மற்றொரு ரெயில் என்ஜினில், பழுதான ரெயில் என்ஜினை சரி செய்வதற்காக மேட்டூருக்கு இழுத்து சென்றனர். நிலக்கரி பாரம் ஏற்றப்பட்ட வேகன்கள் நாமக்கல் ரெயில் நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
ரெயில் என்ஜினில் உள்ள கோளாறு சரிசெய்யப்பட்டு வந்த பின்னரே, நிலக்கரி மீண்டும் பெங்களூரு கொண்டு செல்லப்படும் என அங்கு பணியில் இருந்த தொழிலாளர்கள் கூறினர்.

Related Tags :
Next Story