சாதி பெயரை சொல்லி திட்டியதால் விஷம் குடித்த டிப்ளமோ என்ஜினீயர்


சாதி பெயரை சொல்லி திட்டியதால் விஷம் குடித்த டிப்ளமோ என்ஜினீயர்
x
தினத்தந்தி 14 Dec 2017 3:45 AM IST (Updated: 14 Dec 2017 2:36 AM IST)
t-max-icont-min-icon

சாதி பெயரை சொல்லி திட்டியதால் விஷம் குடித்த டிப்ளமோ என்ஜினீயர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி

மீன்சுருட்டி,

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே வானவநல்லூர் கிராமத்தை சேர்ந்த சிவலிங்கம் மகன் சிவசங்கர் (வயது 22). இவர் ஜெயங்கொண்டத்தில் உள்ள நேஷனல் பாலிடெக்னிக் கல்லூரியில் கடந்த ஆண்டு டிப்ளமோ என்ஜினீயரிங் படிப்பை முடித்துள்ளார். வெளிநாடு செல்வதற்காக பாஸ்போர்ட்டுக்காக விண்ணப்பித்துள்ள சிவசங்கர் தான் பயின்ற பாலிடெக்னிக் கல்லூரிக்கு சென்று படித்ததற்கான சான்று கேட்டுள்ளார். இந்நிலையில் சிவசங்கர் கல்லூரி நிர்வாகத்திற்கு ரூ.40,000 பாக்கி தொகை கட்டாத காரணத்திற்காக சான்று கொடுக்க மறுத்துள்ளனர். அப்போது சிவசங்கர் தான் கடன் கேட்டுள்ளதாகவும்,கடன் தொகை வந்தவுடன் பாக்கி தொகையை கொடுத்துவிடுவதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் அதனை ஏற்க மறுத்த கல்லூரி ஊழியர்கள் சிலர் சிவசங்கரை சாதி பெயரை சொல்லி திட்டியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த சிவசங்கர் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை(விஷம்) எடுத்து சென்று தனது வயலில் வைத்து குடித்துள்ளார். அங்கு மயங்கி கிடந்த சிவசங்கரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். 

Next Story