திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கிரிப்பிரகார மண்டபம் முழுவதையும் இடித்து விட்டு புதிதாக கட்டப்படும்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கிரிப்பிரகார மண்டபம் முழுவதையும் இடித்து விட்டு புதிதாக கட்டப்படும் என்று அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கூறினார்.
திருச்செந்தூர்,
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கிரிப்பிரகார மண்டப மேற்கூரை நேற்று காலையில் திடீரென்று இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கிய திருச்செந்தூரைச் சேர்ந்த ஆதிநாராயணன் மனைவி பேச்சியம்மாள்(வயது 43) உயிரிழந்தார். மேலும் செந்தில் ஆறுமுகம், கந்தசாமி ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ், அறநிலையத்துறை ஆணையாளர் ஜெயா மற்றும் அதிகாரிகள் திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று பலியான பேச்சியம்மாளின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பேச்சியம்மாளின் குழந்தைகளுக்கு ஆறுதல் கூறினார். அப்போது அவர், முதல்-அமைச்சரிடம் பேசி, கூடுதல் நிவாரணத்தொகை வழங்க வலியுறுத்துவதாகவும், குழந்தைகளுக்கு உயர் படிப்பு மற்றும் அரசு வேலைவாய்ப்பு வழங்க ஏற்பாடு செய்வதாகவும் உறுதி அளித்தார்.
பின்னர் பேச்சியம்மாளின் குடும்பத்தினரிடம் ஈமக்கிரியைக்கான உதவித்தொகை ரூ.10 ஆயிரத்தை மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் வழங்கினார். அப்போது அவர், பேச்சியம்மாளின் குடும்பத்தினருக்கு பசுமை வீடு திட்டத்தில் வீடு ஒதுக்கீடு செய்ய ஏற்பாடு செய்வதாக தெரிவித்தார்.
தொடர்ந்து அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் திருச்செந்தூர் கோவிலில் இடிந்து விழுந்த கிரிப்பிரகார மண்டபத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பழுதடைந்த கிரிப்பிரகார மண்டபம் முழுவதையும் இடித்து அகற்றி விட்டு புதிதாக கட்ட ஏற்பாடு செய்யப்படும். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோவில் முழுவதுமாக பராமரிக்கப்பட்டு புதுப்பிக்கப்படுவது வழக்கம். தற்போது திருச்செந்தூர் கோவிலில் கடற்கரையை ஒட்டிய கிரிப்பிரகார மண்டபம் உப்பு காற்றினால் அதிகமாக அரிக்கப்பட்டதால், மேற்கூரை பலமிழந்து இடிந்து விழுந்து விட்டது.
இங்கு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள ஆய்வு நடத்துமாறு ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. ஆனால் அதற்குள்ளாக இந்த துயர சம்பவம் நிகழ்ந்து விட்டது. இதுபோன்ற துயர சம்பவம் நிகழாத வகையில் அனைத்து கோவில்களிலும் உடனே ஆய்வு நடத்த ஏற்பாடு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிலையில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் நேற்று இரவு நெல்லை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். அங்கு சிகிச்சை பெற்று வரும் சுக்கு காப்பி வியாபாரி செந்தில் ஆறுமுகம், திருப்பூர் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கந்தசாமி ஆகியோரை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் நல்ல முறையில் சிகிச்சை அளிக்குமாறு டாக்டர்களை கேட்டுக் கொண்டார். இதுதவிர தமிழக அரசு சார்பில் 2 பேருக்கும் தலா ரூ.1 லட்சம் நிவாரண உதவித்தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.
அப்போது நெல்லை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெயா, கூடுதல் ஆணையர் திருமகள், இணை ஆணையரும், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் செயல் அலுவலருமான பாரதி, நெல்லை இணை ஆணையர் பரஞ்ஜோதி, சுசீந்திரம் இணை ஆணையர் அன்புமணி, கோவில் சூப்பிரண்டுகள் யக்ஞ நாராயணன், முருகானந்தம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story