4 வயது சிறுமியை இரும்பு கம்பியால் கொடூரமாக தாக்கிய வாலிபர் கைது
பயந்தரில், முன்விரோதம் காரணமாக 4 வயது சிறுமியை இரும்பு கம்பியால் கொடூரமாக தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
வசாய்,
தானே மாவட்டம் பயந்தர் கிழக்கு ஆசாத் நகரை சேர்ந்தவர் இப்ரார் சேக். இவரது மகள் ஆப்ரின் (வயது4). சம்பவத்தன்று இரவு சிறுமி ஆப்ரின் அங்குள்ள ஒரு குப்பை தொட்டியில் ரத்த வெள்ளத்தில் மயங்கிய நிலையில் கிடந்தார். இதைப்பார்த்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து அறிந்ததும் பதறி அடித்துக்கொண்டு ஓடிவந்த இப்ரார் சேக் மகளை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு சிறுமி ஆப்ரின் இரும்பு கம்பியால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
மேலும் அவளது மண்டை ஓடு உடைந்து, மூளை வரை காயம் ஏற்பட்டுள்ளதாகவும், சுயநினைவு இழந்து சிறுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையே சிறுமியை கண்மூடித்தனமாக இரும்பு கம்பியால் தாக்கிய ஆசாமி குறித்து பயந்தர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில், சிறுமி என்று கூட பாராமல் இந்த வெறிச்செயலை செய்தது இப்ரார் சேக்கின் பக்கத்து வீட்டில் வசித்து வரும் ரகிம் சேக் (19) என்ற வாலிபர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர். விசாரணையில், முன்விரோதம் காரணமாக இப்ரார் சேக்கை பழிவாங்க அவரது மகள் ஆப்ரினை இரும்பு கம்பியால் சரமாரியாக தலையில் தாக்கி, குப்பை தொட்டியில் வீசியதாக ரகிம் சேக் போலீசாரிடம் கூறினார்.

Related Tags :
Next Story