துப்பாக்கி குண்டுகள் திருட்டு: 6 போலீசார் பணி இடைநீக்கம்
ஆயுதப்படை அலுவலகத்தில் துப்பாக்கி குண்டுகள் திருடிய போலீஸ்காரர், பணியில் கவனக்குறைவாக இருந்த போலீசார் என 6 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
மும்பை,
மும்பை போலீசின் ஆயுதப்படை பிரிவு அலுவலகம் ஒர்லியில் உள்ளது. இந்த அலுவலகத்தில் ஆயுதங்கள் வைக்கப்பட்டிருக்கும் அறையில் கடந்த சனிக்கிழமை இரவு ஏட்டு விஜய் ஹிர்லேகர், போலீசார் சங்கேத் மாலி, மகேஷ் துத்வாடே, ரகுபவார், ராகுல்கதம் ஆகிய 5 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மறுநாள் காலை பார்த்தபோது, அங்கிருந்த 50 துப்பாக்கி குண்டுகள் காணாமல் போயிருந்தது.
இதைப்பார்த்து போலீசார் 5 பேரும் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், அன்றைய தினம் இரவு குர்லா போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வரும் மகேந்திர பாட்டீல் என்பவர் வந்து சென்றிருந்தது தெரியவந்தது.
இதற்கிடையே, தான் தான் துப்பாக்கி குண்டுகளை திருடியதாக கூறி போலீஸ்காரர் மகேந்திர பாட்டீல் அவற்றை தாதர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில், துப்பாக்கி குண்டுகளை திருடிய போலீஸ்காரர் மகேந்திர பாட்டீல் மற்றும் பணியில் கவனக்குறைவாக இருந்த ஆயுதப்படை போலீசார் 5 பேர் அதிரடியாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

Related Tags :
Next Story