புதுவை நிதிநிலையை சமாளிக்க கட்டுப்பாடு அதிகாரிகளுக்கு, கிரண்பெடி உத்தரவு
புதுவை நிதிநிலையை சமாளிக்கும் வகையில் அதிகாரிகளுக்கு கட்டுப்பாடுகள் விதித்து அரசு துறைகளில் பணம் இருந்தால் மட்டுமே டெண்டர் விட வேண்டும் என்று கவர்னர் கிரண்பெடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
புதுச்சேரி,
மத்திய அரசின் நடவடிக்கையால் புதுவை மாநிலத்தில் நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக முதல்- அமைச்சர் நாராயணசாமி ஏற்கனவே புகார் தெரிவித்து வந்தார். இந்தநிலையில் அடுத்த மாதம் அரசு ஊழியர்களுக்கு சம்பளம்போடக்கூட முடியாத நிலை இருப்பதாக சமீபத்தில் அமைச்சர் கந்தசாமி தெரிவித்தார். ஆனால் அரசு ஊழியர்களுக்கு வழக்கம்போல் சம்பளம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி உறுதியளித்தார்.
நிதி நெருக்கடி காரணமாக பல்வேறு அரசு நலத்திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. இந்த நிலையில் நிதி நெருக்கடியை கருத்தில் கொண்டு கவர்னர் கிரண்பெடி சில நடவடிக்கைகளை எடுத்துள்ளார். இதுகுறித்து அவர் அனைத்து துறை செயலாளர்களுக்கும் ஒரு உத்தரவினை அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
யாராக இருந்தாலும் உயர் வகுப்பு பிரிவில் விமான பயணம் மேற்கொள்வது தடை செய்யப்படுகிறது. அரசுத் துறைகளில் டெண்டர் விடும்போது அதற்குரிய பணம் உள்ளதா? என்பதை உறுதி செய்த பின்னரே டெண்டர் விடவேண்டும். பணம் இல்லாமல் டெண்டர் விட்டு ஒருவரையொருவர் குற்றம் சுமத்தி மக்கள் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடாது. தலைமை செயலாளருடன் கலந்து ஆலோசித்த பிறகே இந்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முடிவுகள் குறித்து நிதித்துறை செயலாளருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு உதவி பெறும் அனைத்து சங்கங்களும் இந்த முடிவுகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். அவ்வாறு செயல்படாவிட்டால் அதற்கு அந்த துறைத்தலைவர்களே பொறுப்பாவார்கள் என்று கூறியுள்ளார்.
மேலும் கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
புதுவை அரசிடம் இலவச அறிவிப்புகள்தான் உள்ளன. இது எதிர்காலத்திற்கு தேவையான விதைகளை விதைப்பதற்கு பதிலாக கைக்கெட்டும் தூரத்தில் உள்ள பழங்களை பறிக்கும் செயலாக உள்ளது. அரசு நிர்வாகத்தில் உள்ள அதிகாரிகளும், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும் குறிப்பிட்ட நாட்களே பணியில் இருக்கக்கூடியவர்கள். யாரும் இதில் நிரந்தரமாக இருக்கப்போவதில்லை. பணியில் இருப்பவர்கள் விதைக்கலாம். மற்றவர்கள் அறுவடை செய்யலாம். சிலர் இரண்டையும் செய்யலாம். சிலர் மட்டுமே விதைக்காவிட்டாலும் அறுவடை செய்வார்கள்.
இதுபோன்ற அனைத்து வகையினரையும் நிர்வாகத்தில் கொண்டுள்ளோம். புதுச்சேரியின் நிதிநிலை குறித்து உண்மை நிலையை தெரிவித்து தைரியமாக செயல்படுவதற்கு பதிலாக பிறரை குற்றஞ்சாட்டி வருகிறோம். நிதி நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான திட்டங்கள் உள்ளன. அதை யார் செய்வார்கள்?
மக்களுக்கு அரசின் நிதி நிலை குறித்து தெரிந்துகொள்ள உரிமை உள்ளது. அரசுக்கும் அதை சொல்ல வேண்டிய கடமை உள்ளது. இவ்வாறு அந்த பதிவில் கவர்னர் கிரண்பெடி கூறியுள்ளார்.

Related Tags :
Next Story