காங்கிரஸ் கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த பா.ஜனதா முயற்சி
முதல்–மந்திரி சித்தராமையாவும், பரமேஸ்வரும் ஒற்றுமையாக செயல்படுகிறார்கள் என்றும், காங்கிரஸ் கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த பா.ஜனதா முயற்சி செய்வதாகவும் மந்திரி ரமேஷ்குமார் கூறினார்.
கோலார் தங்கவயல்,
இந்த கூட்டம் முடிந்த பின் ரமேஷ்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–
முதல்–மந்திரி சித்தராமையாவுக்கும், தலைவர் பரமேஸ்வருக்கும் இடையே மோதல் இருப்பதாக எடியூரப்பா தவறாக சித்தரித்து வருகிறார். இதனை யாரும் நம்ப வேண்டாம். அவர்கள் 2 பேரும் ஒற்றுமையாக செயல்படுகிறார்கள். காங்கிரஸ் கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தி அதில் அரசியல் லாபம் பெற எடியூரப்பாவும், பா.ஜனதாவினரும் முயற்சி செய்கிறார்கள். குஜராத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறுவது நிச்சயம்.
குஜராத் தேர்தல் பற்றி ஊடகங்கள் பல்வேறு கருத்து கணிப்புகளை வெளியிட்டு வருகிறது. குஜராத்தில் வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும் காங்கிரசுக்கு பயம் இல்லை. பா.ஜனதாவினருக்கு தான் பயம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story