மும்பை மாநகராட்சி 21–வது வார்டு இடைத்தேர்தல்: பா.ஜனதா வெற்றி


மும்பை மாநகராட்சி 21–வது வார்டு இடைத்தேர்தல்: பா.ஜனதா வெற்றி
x
தினத்தந்தி 16 Dec 2017 5:37 AM IST (Updated: 16 Dec 2017 5:37 AM IST)
t-max-icont-min-icon

மும்பை மாநகராட்சிக்கு நடந்த தேர்தலின்போது, காந்திவிலியில் உள்ள 21–வது வார்டில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்ட சைலாஜா கிர்கர் வெற்றி பெற்று கவுன்சிலர் ஆனார்.

மும்பை,

மும்பை மாநகராட்சிக்கு நடந்த தேர்தலின்போது, காந்திவிலியில் உள்ள 21–வது வார்டில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்ட சைலாஜா கிர்கர் வெற்றி பெற்று கவுன்சிலர் ஆனார். சைலஜா கிர்கர் கடந்த செப்டம்பர் மாதம் மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதையடுத்து அந்த வார்டுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் பா.ஜனதா சார்பில் பிரதிபா கிர்கர் போட்டியிட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் நீலம் மதாலே களம் இறக்கப்பட்டிருந்தார். கடந்த 13–ந்தேதி அந்த வார்டுக்கு வாக்குப்பதிவு நடந்தது. நேற்றுமுன்தினம் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இதில், பா.ஜனதா வேட்பாளர் சைலஜா கிர்கருக்கு 9 ஆயிரத்து 591 வாக்குகள் கிடைத்தன. அவர் காங்கிரஸ் வேட்பாளரை 7 ஆயிரத்து 607 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார். நீலம் மதாலேவுக்கு 1,984 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.


Next Story