ராகுல்காந்தி காங்கிரஸ் தலைவரானதால் பா.ஜனதாவின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் எச்.ராஜா பேட்டி


ராகுல்காந்தி காங்கிரஸ் தலைவரானதால் பா.ஜனதாவின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் எச்.ராஜா பேட்டி
x
தினத்தந்தி 17 Dec 2017 5:00 AM IST (Updated: 17 Dec 2017 12:47 AM IST)
t-max-icont-min-icon

ராகுல்காந்தி காங்கிரஸ் தலைவரானதால் பா.ஜனதாவுக்கு எந்த பாதிப்பும் இல்லை. எங்கள் கட்சியின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்று பா.ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறினார்.

கடலூர்,

பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா நேற்று கடலூருக்கு வந்தார். கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் பா.ஜனதா கட்சியின் மூத்த நிர்வாகி அகோரத்தை சந்தித்து உடல் நலம் விசாரித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

பாரதீய ஜனதா கட்சியின் மூத்த நிர்வாகி அகோரம், நியாயமற்ற முறையில் பழிவாங்கும் நோக்கத்துடன் கைது செய்யப்பட்டு இருக்கிறார். சிவன் கோவில்களையும் பெருமாள்கோவில்களையும் இடிக்க வேண்டும் என்று கலி.பூங்குன்றனையும், ஜவஹிருல்லாவையும் பக்கத்தில் வைத்துக்கொண்டு திருமாவளவன் பேசியதை கண்டித்ததற்காக அகோரம் கைது செய்யப்பட்டு இருக்கிறார். அவர் உடல் நலமில்லாமல் இருந்ததால் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தமிழகத்தில் நிர்வாகமே இல்லை. எனவே இச்சம்பவம் தொடர்பாக யாரிடம் சென்று முறையிடுவது? திருவெண்காடு போலீஸ் நிலையம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கட்ட பஞ்சாயத்து மையமாக செயல்படுகிறது. இதுதொடர்பாக பா.ஜனதா கட்சி உரிய நடவடிக்கை எடுக்கும்.

கடலூரில் கவர்னர் ஆய்வின் போது பத்திரிகையாளர்கள், அரசு அதிகாரிகள், காவல்துறையினர் உடன் சென்றனர். கவர்னருக்கு எதிராக உள்நோக்கத்தோடு வி‌ஷமத்தனமாக அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பிரஸ் கவுன்சிலில் நாங்கள் புகார் கொடுக்கப்போகிறோம்.

ராகுல்காந்தி காங்கிரஸ் தலைவரானதால் பா.ஜனதாவின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும்.

இவ்வாறு எச்.ராஜா கூறினார்.


Next Story