சாலை பாதுகாப்பிற்கு போலீஸ் துறை மூலம் ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு கலெக்டர் தகவல்
சாலை பாதுகாப்பிற்கு போலீஸ் துறை மூலம் ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு கலெக்டர் கோவிந்தராஜ் தகவல்
கரூர்,
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் கோவிந்தராஜ் தலைமை தாங்கி பேசியதாவது:-
சாலை விபத்துகளை குறைக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க வேண்டும். சாலையோரங்களில் பயனற்ற, காய்ந்த மரக்கன்றுகளை அகற்றி போக்குவரத்திற்கு தடையின்றி வசதி ஏற்படுத்திட வேண்டும். கடவூர் மைலம்பட்டியில் ரவுண்டானா அமைத்திட வேண்டும். மாவட்டம் முழுவதும் சாலை ஓரங்களில் அமைந்துள்ள கழிவுநீர் பாதைகளை தூர்வாரி சரி செய்ய வேண்டும். சாலை பாதுகாப்பிற்கு போலீஸ் துறை மூலம் ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து பொருட்கள் வாங்கி பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் சாலையோரங்களில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கவும் அறிவுறுத்தினார். கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன், மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். முன்னதாக ராஜஸ்தான் மாநிலத்தில் கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

Related Tags :
Next Story